Saturday, April 9, 2011

அவளொரு முஸ்லிம் பெண்

அவளொரு முஸ்லிம் பெண்

உடை உடுத்தும் மனித பண்பாட்டில் சர்ச்சை மற்றும் விவாதப் பொருளாகிப் போய் நிற்பவள் முஸலிம் பெண் மட்டும் தான். உடுப்பில் வேறு எந்த சமுதாயமும் இந்த அளவு சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருப்பதாக நமக்குத் தெரியவில்லை. நிறைவாகவோ எத்துனை குறைவாகவோ உடுத்திக் கொண்டு வீதி தோரும் அலைந்தாலும் முஸ்லிம் சமுதாயம் உட்பட எந்த ஆணும் இந்த சர்ச்சையில் சிக்குவதில்லை. அப்படியானால் முஸ்லிம் பெண் மட்டும் இதில் ஏன் முதல் பொருளாகிப் போனாள்? என்பதை நாம் சிந்தித்துதான் ஆக வேண்டும்.


அவளொரு முஸ்லிம் பெண்.



மதம் என்ற நம்பிக்கையுடனும், சமூகம் என்ற அந்தஸ்துடனும் இயங்கும் மனிதவாழ்க்கையை நாம் எடுத்துக் கொள்வோமேயானால் இஸ்லாத்தை விடுத்து பிற மத சமூக பண்பாட்டில் "அனைத்திலும் நீ இப்படித்தான் நடந்துக் கொள்ள வேண்டும்" என்ற ஒரு அறிவுரை முன் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மனிதனின் தனி வாழ்வு - பொதுவாழ்விலிருந்து கடவுள் நம்பிக்கை பிரித்தெடுக்கப்பட்டு, அவனது வாழ்க்கை முறையை வேறுபட்ட இரு பிம்பங்களாக்கி வைத்துள்ளது. 'கோயிலில் போய் கும்பிடு அதை கடந்து வந்தப் பிறகு நீ கோபுரத்தில் வாழ்ந்தாலும் சரி, குடிசையில் வாழ்ந்தாலும் சரி அங்கு கோயிலை - கும்பிடும் இறைவனைப் பற்றி நினைக்கத் தேவையில்லை' என்ற நிலையே நீடிக்கிறது. சில - பல சிந்தனையாளர்களால் 'உன் தனிவாழ்விலோ - பொதுவாழ்விலோ இறைவன் தலையிடக் கூடாது" என்ற போதனையும் முன் வைக்கப்படுகிறது. (மசூதியிலும் - கோயிலிலும் மட்டும் குடும்பம் நடத்தும் இறை நம்பிக்கை மனித வாழ்விற்கு தேவைதானா... என்ற சர்ச்சைக்குள் நாம் நுழையவில்லை)

ஆனால் முஸ்லிம் ஆண் - பெண் இவர்களின் நம்பிக்கை "இறைவன் தன் வாழ்வின் அனைத்துத் துறைக்கும் வழிகாட்டியுள்ளான்" என்பதாகும். (இந்த நம்பிக்கை சரியா.. தவறா.. என்பதை நாம் தனியாக விவாதித்துக் கொள்ளலாம்). இந்த நம்பிக்கைத்தான் முஸ்லிம் பெண்களை மற்றப் பெண்களை விட சற்று அதிகமாக உடை உடுத்தத் தூண்டுகிறது. இது அவள் விரும்பி ஏற்றுக் கொண்ட நம்பிக்கை அடிப்படையில் அமைந்த உடையாகும்.

திணிக்கப்படுகிறதா...

முஸ்லிம் பெண்கள் விரும்பாத நிலையில் அவர்கள் மீது இந்த உடை திணிக்கப்பட்டு விட்டது போன்ற ஒரு தோற்றத்தை சில எழுத்தாளர்கள் அவ்வப்போது முன் வைக்கிறார்கள். விரும்பி ஏற்காத நிலையில் திணிக்கப்படும் எதுவும் நீண்ட காலத்திற்கு நிலைப் பெற்று நிற்காது என்பது மெத்த படித்தவர்களுக்கு விளங்காமல் போய்விட்டதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏனெனில் 'நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் " என்ற கூட்டத்தில் நிற்பவர்களாகவே இவர்கள் விளங்குகிறார்கள்.

உண்மையில் மத நம்பிக்கை என்ற பெயரில் பெண் விரும்பாத நிலையில் அவள் மீது இத்தகைய உடை திணிக்கப்பட்டிருந்தால் அதற்கெதிராக உலகலாவிய போராட்டம் என்றைக்கோ வெடித்திருக்கும். வெடித்தக் காலங்களிலேயே இந்த திணிப்பு காலாவதியாகிபோயிருக்கும். மத நம்பிக்கை என்ற துவக்கத்திலிருந்து பல நூற்றாண்டுகள் கடந்தப் பிறகும் அந்த மேலதிக உடை புழக்கத்திலிருக்கிறது என்றால் இதை திணிப்பு என்றுக் கூறுபவர்கள் தூர நோக்கு அற்றவர்கள் என்பதே பளிச்சிடுகிறது.
எந்தத் திணிப்பாவது நீண்டகாலம் வாழ்ந்த - வாழ்கின்ற வரலாற்றை எடுத்துக் காட்டுங்களேன் பார்ப்போம்.

வழக்குகள் ஏதும் உண்டா...?

பெண்களுக்கு எதிராக நடக்கும் அனேக கொடுமைகள் வழக்குகளாக்கப்பட்டு பின்னர் வரலாற்று நிகழ்வுகளின் கசங்கல்களாக அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்றைக்கும் பதிவு செய்யப்படுகின்றன. "மேலதிக உடை எங்களுக்கு சுமையானவை - அடிமைத்தனமானவை" என்று முறையிடப்பட்ட, எதிர்க்கப்பட்ட வழக்குகளும் - சம்பவங்களும் உலகில் எத்துனை என்பதை யாராவது எடுத்துக் காட்ட முடியுமா... "

முக்காடுகளுடன் பள்ளிக்கு வரக்கூடாது" என்று சில நாடுகளில் பள்ளியின் நிர்வாகம் கட்டளையிட்டபோது 'எங்கள் தலை முந்தானைகளால் உங்கள் பள்ளிக் கூடத்திற்கு எத்தகையக் கெடுதியும் வரைப்போவதில்லை. அதே சமயம் நீங்கள் எங்கள் முக்காடுகளை கழற்றுவதன் மூலம் எங்கள் மனங்களைப்புண்படுத்துகிறீர்கள்" என்ற எதிர்வாதம் மாணவிகளால் முன்வைக்கப்பட்ட சம்பவங்களையும் - நிர்வாகம் முக்காடை கழற்றுவதில் குறியாக நின்றபோது மாணவிகள் நீதி மன்றத்தை அணுகுகிறார்கள் என்ற சம்பவத்தையும் தான் உலகம் கண்டு வருகிறது.

இஸ்லாமிய நீதி மன்றங்கள் - இந்திய நீதி மன்றங்கள் - உள்ளுர் ஜமஅத்துகள் இங்கெல்லாம் ஜீவனாம்சம் உட்பட தலாக், சொத்து போன்ற வழக்குகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. அவை கனிசமான அளவைப் பெற்றுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. இதே இடங்களில் முஸ்லிம் பெண்கள் தங்கள் உடைகளுக்கு எதிராக தொடுத்த வழக்குகள் எத்துனை?
தீர்மாணிக்க வேண்டியது பெண்களா..?

பெண்கள் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்று ஆண்கள் பேசக்கூடாதாம். பெண்கள் தான் பேச வேண்டுமாம். அதிலும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டுமாம். கருத்து முன் வைக்கப்பட்டு அது ஆமோதிக்கவும் பட்டுள்ளது.முஸ்லிம் பெண்கள் பேச துவங்கி "புர்காவே புண்ணியம்" 'புர்காவே கண்ணியம்" என்று ஓட்டுப்போட்டு விட்டால் பெண்ணினம் அனைத்தும் அதை ஒப்புக் கொண்டு அதை அணிய துவங்கி விடுமா...? முஸ்லிம் பெண்கள்தான் பேச வேண்டும் என்ற கருத்து ஏன் வைக்கப்படுகிறது? அவள் புர்கா என்பது அடிமைத்தனம் என்று கூறிவிடுவாள் அந்த கருத்தை வைத்தே புர்காவைக கழற்றி பெண்ணினத்திற்கு விடுதலை வாங்கி கொடுத்து விடலாம் என்ற எண்ணத்திலா..

அவளாக விரும்பி அணியும் உடைப் பற்றி அவளே விமர்சிக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகை மனநிலையைக் காட்டுகிறது என்பது உலகிற்கு புரியாமல் இல்லை.

பெண்களின் உடையை பெண்கள் தான் தீர்மானிக்க வேண்டுமா... இனி பார்ப்போம்.

உடை கழற்றும் ஆண் வக்கிரம்

பர்தா முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறதா.. என்று கட்டுரை வெளியிட்டு அதில் உலக நாடுகளில் முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் அவதியை - கொடுமையை நேசக்தகுமாரர் அக்கறையோடு வெளிபடுத்தி உள்ளார்.

அந்தக் கட்டுரையின் தகவல்கள் உண்மையானவை என்றே வைத்துக் கொண்டு அவர் எழுதிய கட்டுரையை அவரே மீண்டும் ஒரு முறை படிக்கட்டும். அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை விட அதில் ஈடுபடும் ஆண்களின் புத்தி - அவன் படைப்பு எத்துனை வக்கிரமானவை என்பது புலப்படும்.

முஸ்லிம் பெண்கள் அணியும் மேலதிகமான உடைக்கும் அவர் எடுத்துக் காட்டிய தகவல்களுக்கும் தொடர்பு எதுவுமில்லை என்பதை நாம் அடுத்தப்பகுதியில் விளக்குவோம். அப்போது அந்த கட்டுரையின் யதார்த்தம் என்ன என்பது உலகிற்கு விளங்கும்.

பெண் பற்றியும் அவள் உடைப் பற்றியும் அக்கறையுள்ள ஆண்கள் பேச துவங்கியுள்ளதால் 'வெளிப்படையாக" பல விஷயங்களை பேச வேண்டித்தான் உள்ளது.

பெண் தன்னைப் பொருத்தவரை அனைத்து வித நியாயமான உடற்கூறு, உளவியல் நியதியைப் பெற்றவள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. தனக்கும் உணர்வுண்டு, அறிவு உண்டு, திறமையுண்டு, விருப்பு வெறுப்பு உண்டு, ஏக்கம் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு. கல்வித் தகுதியும் கற்றப்பின் நிர்வாகத் திறமையும் தனக்குண்டு என்பதை எடுத்துக் காட்டி ஆணுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவளல்ல என்பதை
நியாயபடபடுத்தலாம். ஏன் இங்கு கூட ஆணோடு தன்னை ஒப்பிடாமல் அவனைவிடவும் திறமை மிக்கவள் என்பதை நிரூபிக்கலாம்.

இதில் ஆயிரம் நியாயம் இருந்தாலும் கூட ஒரு ஆணுடைய பார்வைக்கு முதல் கட்டம் பெண் என்பவள் கவர்ச்சிப் பொருள் தான். இந்தக் கருத்து சிலரை கோபமூட்டலாம். ஆனால் இதுதான் யதார்த்தம் இதுதான் உண்மை.
அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும், ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி ட்கப்படுகிறது.

"பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்"?.

அவர் பதிலளித்தார்.

"நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்"

இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.

பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும், ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல்
சார்ந்த கவர்ச்சிதான்.

பெரும் பண முதலைகளின் (இவர்கள் எந்த மதத்தை சார்ந்நதவராகவும் இருக்கலாம் அல்லது மதமோ கடவுளோ வேண்டாம் என்று கூறி தன் கல்வியையும் கலாச்சாரத்தையும் கடவுளாக ஏற்றுக் கொண்டவராகவும் இருக்கலாம்) பொருளாதார சுரண்டலுக்கு கருவியாக்கப்படுவது பெண்கள் தான்.

தாய்லாந்தின் சில உணவகங்களில் செய்யப்படும் விளம்பரங்கள்."எங்கள் உணவகத்திற்கு நீங்கள் சாப்பிட வந்தால் கையையோ கத்தியையோ நீங்கள் வீணாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் இருக்கையில் சாய்ந்து ஹாயான ரெஸ்ட் எடுங்கள். எங்கள் ஹோட்டல்களின் அழகிகள் உணவை உங்கள் வாயில் ஊட்டி விடுவார்கள். சாப்பிடுவதில் இத்துனை கிளுகிளுப்பா என்று நீங்கள் அசந்துப் போவீர்கள்."

இதற்கு அடிப்படை காரணம் என்ன? பெண்களின் உடல். அது சார்ந்த ஈர்ப்பு.
ஆண்களின் காம வேட்கையையும் வக்கிரத்தையும் நன்கு உணர்ந்த நிலையில் அதை ஊக்குவிக்கும் விதமாகத்தான் நவீனத்துவ வாதமும் பெண்ணின் உடையும் அமைந்துள்ளன.

பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.

I A S தேர்வு எழுதி அதிகாரியாக பொறுப்பேற்ற ரூபன் தியோல் பஜாஜ் அவர் கலந்துக் கொண்ட ஒரு விருந்தில் பஞ்சாப் மாநில டி.ஜி.பி கில்லும் கலந்துக் கொள்கிறார். சமயம் பார்த்து IAS அதிகாரியான அந்தப் பெண்ணின் பின்புறம் தன் கையால் தடவி விடுகிறார். ரூபன் ஒரு படித்த அதிகாரியாக இருந்ததால் இந்த பாலியல் சீண்டலை கோர்ட்வரை கொண்டு செனறு உலகிற்கு காட்டினார்.

DGP தண்டனைப் பெற்றது இங்கு சிறப்பு அல்ல. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பிலிருக்கும் ஒரு அதிகாரி இந்த கீழ்தரமான செயலில் ஈடுபடுகிறார் என்றால் என்ன காரணம்? பெண் மீதான ஈர்ப்பைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது.

பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் பிரகாஷ், நடிகர் சுமன் உட்பட பிரபல்யங்கள், சங்கராச்சார்யார் - பிரேமனந்தா உட்பட ஆன்மீக குருக்கள். (வெளியில் தெரியாமல் இருக்கும் ஹஜ்ரத்களும் - பாதிரிகளும் கூட இதில் அடங்கலாம்) பலகாவலர்கள் இவர்கள் அனைவருமே பெண்களைப் பதம்பார்த்துள்ளார்கள்.

இப்படி கோடிக்கோடியான ஆண் வக்கிரங்களை சுட்டிக் காட்டலாம். இவை அனைத்துமே பெண்களின் மீதான ஆண்களின் ஈர்ப்புக்குரிய உதாரணங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு என்ன?

1) ஆண்களின் உணர்வுகளை சாகடித்து பேடிகளாக ஆக்க வேண்டும்.

2) மிகக்கடின தண்டனைகள் வழியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

3) நிலைமைகளின் விளைவுகளை உணர்ந்து முடிந்தவரை பெண்கள் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதில் முதல் நிலையை தேர்ந்தெடுக்க சாத்தியமில்லை.

இரண்டாம் வழியில் குற்றங்கள் குறையலாம். தண்டனைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதத்தின் உள்ளே நாம் இங்கு நுழையவில்லை.

மூன்றாவது வழிதான் பாதுகாப்பிற்கு சிறந்த வழி. பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் இங்கு குறிப்பிட்டுள்ளது வெறும் புர்காவிற்கு மட்டுமல்ல அது அனைத்துப் பாதுகாப்பையும் குறிக்கும். அதில் மேலதிக உடையும் அடங்கும். (இங்குதான் அதாவது
மூன்றாவது கருத்துக்குதான் நேசக்குமாரர் விமர்சனக்கட்டுரை வெளியிட்டுள்ளார். அதை அடுத்துப் பார்ப்போம்)

பெண்களின் மேலதிக உடை அடிமைத்தனம் என்று விமர்சிப்போர் (தன்னை முழுமையாக மூடிக் கொண்டு ஆட்சிப் புரியும் ஜெயலலிதாவை அடிமையின் சின்னமாகக் கொள்ளலாமா..) இளம் பெண்களிடம் இந்தக் கருத்தை கொண்டு செல்வதின் மூலம் சுதந்திரம் என்பதற்கான பொருளை
ஆடைக்குறைப்பு என்ற அர்த்தத்தில் உணர்த்தி நிலைமையை இன்னும் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்.

தொடையும் புட்டமும் மார்பும் தெரிய உடை உடுத்தி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படுபவள் வேண்டுமானால் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கலாம். அந்த மீடியாக்கலாச்சாரத்தால் கவரப்பட்டு அதேபோன்று உடைஉடுத்தி சுதந்திரம் கொண்டாடும் பெண்களில் எத்துனைப் பேருக்கு
பாதுகாப்பு வளையம் இருக்கிறது..?

மேலதிக உடை அடிமைத்தனம் என்று பல்லிலிக்கும் நேசக்குமாரர்கள் அதையே முன்மொழிய துடிக்கும் நாகரீக? பெண்கள் இதற்கு ஒரு மாற்றுவழியை முன் மொழியட்டும் பார்க்கலாம்.

பெண் எந்த அளவிற்கு தன்னை ஆடையால் மறைத்துக் கொள்ளலாம் என்ன அளவு வைத்துள்ளீர்கள் என்று முன்பு கேள்வி வைத்தோம். நேசக்குமாரர் பதில் சொல்லவில்லை.

" அதை ஆண்களாகிய நீங்கள் பேசத்தேவையில்லை. பெண்கள் பார்த்துக் கொள்வார்கள் போய் ஜோலியை பாப்பியலா" என்று அழகுத் தமிழில் முழங்கிய அந்தப் பெண்ணும் இந்த அளவிற்கு மறைப்பதில் தான் பெண் சுதந்திரம் உள்ளது என்பதை சொல்லவில்லை.

பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனைத்தான் போங்கள்.

மனைவியிடம் பால் குடிப்பது ஹராமா..? பதில்கள் - 32

*இறைநம்பிக்கையை மறைக்கலாமா..
**மகளின் வாழ்வுக்காக கொள்கையை விட்டுக் கொடுக்கலாமா...
***பெண்கள் மெட்டி அணிதல்..
****விபச்சாரம் செய்யும் ஆணின் மனைவியும் அதே வழியிலா.. *****பிரசவத்தின் போது கணவன் பக்கத்தில் இருப்பது ஹராமா..
******அந்த 72 கூட்டம்..
*******சிவப்பு ஆடை,
********சலாம் சொல்லக் கூடாத நேரம்...
*********மனைவியிடம் பால் குடித்தால் மகனாகி விடுவார்களா..
**********அமுக்கு பிசாசின் அராஜகம்....
 
கேள்வி பதில் தொகுப்பு - 32

392) கேள்வி: நான் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸுலுஹூ என்று மனதலவில் ஏற்றுக் கொண்டேன். ஆனால் எனது பெற்றோர் உற்றார் உறவினர்கள் நான் இஸ்லாத்துக்கு மாறுவதை கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள். நான் என்னுடைய இஸ்லாமிய ஏற்பை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் மிகுந்த மன வேதனையில் தவிக்கிறேன். என்னுடைய கேள்வி நான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவிக்காததற்காக மறுமையில் தண்டிக்கப்படுவேனா?

இறைவன் அவனை நம்பிய அடியார்களை கைவிடுவதில்லை. இறை நம்பிக்கைக் கொண்டுள்ள நமக்கு சில பொழுதுகளில் சில காரியங்கள் நெருக்கடியாக தெரிந்தாலும் அதற்காக நாம் மனம் சஞ்சலப்பட்டாலும் இறை நம்பிக்கையில் உறுதியுடன் நிலைப்பெற்றிருந்தால் அதற்கும் இறைவன் புறத்திலிருந்து கூலி கிடைத்து விடும் என்பதை இஸ்லாம் தெளிவாகவே சொல்லியுள்ளது.

இன்றைக்கு உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள நிலையல்ல. இஸ்லாத்துடைய ஆரம்ப கால வரலாற்றை எடுத்து பார்த்தால் அன்றைய இறை நம்பிக்கையாளர்கள் கடின நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாத்தின் பகிரங்க எதிரியாக இருந்த உமர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை மக்காவில் மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றவர்களில் பெரும்பாலோர் உமர் போன்றவர்களுக்கு பயந்து தங்கள் இறை நம்பிக்கையை மறைத்தே வைத்திருந்தனர். இதற்கு இறைத்தூதர் அனுமதியும் அளித்தார்கள். உமர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தான் அங்கு அனைவரின் இறை நம்பிக்கையும் பகிரங்க அறிவிப்பாகின.

சில நெருக்கடிகளை சமாளிப்பதற்காக இறை நம்பிக்கையில் - இஸ்லாத்தில் - அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள நிலையில் அதை வெளிக் காட்டாமல் மறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கவே செய்கிறது. கீழுள்ள இறை வசனம் அதை தெளிவாக அறிவிக்கிறது பாருங்கள்.

எவர் (ஈமான்) இஸ்லாமிய நம்பிக்கைக் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் இறை நிராகரிப்பைக் கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு (அல் குர்ஆன் 16:106)

'நான் இறை நம்பிக்கையாளன் தான்' என்று உள்ளத்தில் இஸ்லாம் இல்லாத நிலையில் யார் கிண்டலாக இறை நம்பிக்கையை எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை இந்த வசனம் முன் வைக்கும் அதே வேளைஇ இக்கட்டான சூழ்நிலைக்காக தனது இஸ்லாமிய நம்பிக்கையை தற்கலிகமாக மறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் பாவமான காரியமல்ல. என்பதையும் இறைவன் தெளிவுப்படுத்தியுள்ளான். இந்த வசனத்தில் இடம் பெறும் '.எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை)' என்ற வாசகம் உங்கள் மன அமைதிக்குரியது.

ஆனாலும் இஸ்லாம் ஒரு வாசனை மலருக்கு ஒப்பானது. அது உங்கள் வழியாக தனது வாசனையை வெளிப்படுத்தித் தான் தீரும். இறைவன் உங்களுக்கு அருள் புரிந்துள்ளான். உங்கள் வழியாக எத்துனைப் பேருக்கு இந்த பெரும்பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பதை அவன் தான் அறிவான்.

மிகவும் அமைதியாக சூழ்நிலையை அணுகுங்கள். எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற அவசர பேர்வழிகளிடம் முதலில் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாக சிந்திக்கக் கூடியவர்களிடம் வெளிபடுத்துங்கள். எந்த சந்தர்பத்திலும் நிதானம் இழந்து விடாதீர்கள்.

ஒருவேளை கடைசிவரை உங்கள் இஸ்லாமிய நம்பிக்கையை வெளிபடுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள் உங்கள் எண்ணத்திற்கும்இ முயற்சிக்கும் தகுந்த பலன் கிடைத்து விடும்.

இறைவனின் உவப்பிற்குரியவர்களே நேர்வழிப் பெறுவார்கள். அந்த வகையில் நீங்கள் பாக்கியம் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள். உங்களுக்காக நாங்களும் இறைவனைப் புகழ்கிறோம். அவனுக்கு நன்றி செலுத்துகிறோம். எப்போதும் அவனுடன் தொடர்புடன் இருங்கள்.
----------------------------

393) கேள்வி - சிலபேர் எந்த முறையில் வேண்டுமாலும் தொழுது கொள்ளலாம் இறைவன் நமது உள்ளத்தைதான் பார்க்கிறான் நாம் நெஞ்ஞின் மீது கைகட்டி தொழுகிறோம என்று பார்ப்பதில்லை என கூறுகிறார்கள் . நாம் மாற்றி தொழுதால் நரகம் கிடைத்துவிடாது எனவும் கூறுகிறார்கள் இது சரியா?

தொழுகை என்பது இறைவன் விரும்பும் ஒரு அமலாகும். அதை இறைவன் விரும்பும் விதத்தில் தான் செய்ய வேண்டும். அவன் ஒரு தூதரை அனுப்பி அந்த தூதர் காலம் முழுவதும் தொழுது காட்டிஇ இப்படித்தான் தொழ வேண்டும் என்று கட்டளையும் இட்டு விட்டு போன பிறகு 'எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் இறைவன் உள்ளத்தைத்தான் பார்க்கிறான்' என்றவாதம் எவ்வளவு அறியாமையானது என்பதை விளங்கலாம்.

'இறைவன் உள்ளத்தைத்தான் பார்க்கிறான்'  என்ற வாதத்தை முன்னிருத்தி பல முஸ்லிம்கள் தொழுவதே கிடையாது. காரணம் கூறும் போது நான் உள்ளத்தால் இறைவனோடு உறவாடுகிறேன் அது அவனுக்குத் தெரியும் என்றெல்லாம் உளறிக் கொட்டுகிறார்கள். இறைவன் உள்ளத்தைப் பார்க்கிறான் என்பது உண்மைதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கொள்ள முடியாது. கொள்ளக் கூடாது. உள்ளத்தை ஊடுறுவி அறியும் இறைவன் தான் இறைத்தூதர்களை அனுப்பி அவர்களை அவன் விரும்பும் விதத்தில் வாழவைத்து அவர்களை முஸ்லிம்களுக்கு மாடலாக்கி அவர்களைப் பின்பற்றுங்கள் என்று கட்டளையிட்டுள்ளான். 'அந்தத் தலைவரைப் பின்பற்ற வேண்டுமா..? என்ற குர்ஆன் விளக்கவுரைக் கட்டுரையில் இதை விரிவாக விளக்கியுள்ளோம் அவசியம் அதைப் படிக்கவும். (இங்கு கிளிக் செய்யுங்கள்)

'இறைவன் உள்ளத்தைப் பார்க்கிறான் அது போதும்' என்ற வாதம் இறைத்தூதர்களின் வாழ்க்கையைப் பொய்பிக்கும் வாதமாகும். இறைவன் உள்ளத்தைப் பார்க்கிறான். என்பதை உங்களையும் எங்களையும் விட மிகத் தெளிவாக விளங்கியவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள். இறைவனுடன் நேரடியாக உரையாடி வந்தவர்கள். அவர்கள் இரவு முழுதும் நின்று வணங்கி தன் நன்றியை வெளிப்படுத்தினார்கள். நெஞ்சில் கைக் கட்டித் தொழுதுள்ளார்கள். விரலசைத்துத் தொழுதுள்ளார்கள் என்றால் இதைவிட இன்றைக்கு சிலர் சொல்லும் 'இறைவன் உள்ளத்தைத்தான் பார்க்கிறான் எப்படி வேண்டுமானாலும் தொழுதுக் கொள்ளலாம்' என்ற வாதம் எந்த வகையில் சிறந்ததாகும் என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.

-----------------------------

394) கேள்வி : எனக்கு 1998 ம் வருடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது அப்போது எனக்கு 'அகீகா' (பெண் குழந்தைக்கு 1ஆடும் ஆண் குழந்தைக்கு 2ஆடும்) கொடுக்கவேண்டும் என்ற சட்டம் தெரியாது தற்போது எனக்கு ஒரு சில ஹதீஸ்களை படிப்பதன் மூலம் தெரியவந்தது எனவே நான் தற்போது இதை கொடுக்கலாமா? எவ்வாறு எவ்வளவு கொடுக்கவேண்டும்? 

அகீகா என்பது குழந்தை பிறந்த சந்தோஷத்தை பிறருடன் பகிர்ந்துக்கொள்வதற்காக உள்ள ஏற்பாடாகும். வசதி படைத்தவர்கள் குழந்தை பிறந்த முதல் வாரத்திற்குள் அகீகா கொடுத்து விட வேண்டும். அதுதான் நபிவழி. அகீகா கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் வசதியும் இருந்தும் முதல் வாரத்தில் கொடுக்க முடியாதவர்கள் அடுத்து வரக் கூடிய நாட்களில் அந்த எண்ணத்தை நிறைவேற்றி விட நபிவழிகள் அனுமதியளிக்கின்றன. இந்த நாட்கள் கடந்து விட்ட பிறகு அகீகாவைப் பற்றி சிந்தித்து பலனில்லை. உங்களுக்கு குழந்தை பிறந்து 7 வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் இப்போது அகீகா கொடுக்க எண்ணுவது வேண்டாத ஒன்றாகும். நீங்கள் அகீகா கொடுக்க வேண்டும் என்ற அறிவை இப்போது பெற்றுள்ளீர்கள். இறைவன் நாடி அடுத்த குழந்தை உங்களுக்கு பிறந்தால் அந்த குழந்தைக்கு அகீகாவை நிறைவேற்றி சந்தோஷப்படுங்கள்.

-----------------------------

395) கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)எனது மகளை மணம் முடித்து 1 வருடம் ஆகிறதுஇ இப்போது அவள் ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறாள் (அல்ஹம்துலில்லாஹ்) பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்த வேண்டும் என என்மகளின் புகுந்த வீட்டார் நிர்ப்பந்தம் செய்கிறார்கள்இ எனக்கோ அதில் விருப்பமில்லைஇ இப்போது தாயாகியிருக்கும் என் மகள் பிறந்தபோதே இது போன்ற அனாச்சாரங்களை ஒதுக்கி வந்தவன் நான். இப்போது என் முன்னே நிற்பது கொள்கையா? மகளின் வாழ்வா?என்ற ஊசலாட்டம். நிர்பந்தத்துக்கு பனிந்து விழா நடத்தினால் அல்லாஹ்வின் (வீண் விரயம் செய்யாதீர்கள்) என்ற கட்டளைக்கு மாறு செய்தவனாகி விடுவேனோ என்று பயமாக உள்ளதுஇ இப்பிரச்சினையில் நான் என்ன செய்வது?

இது ஒரு இக்கட்டான நிலை என்று எண்ணாதீர்கள் அதுவே உங்களை மனத்தளர்ச்சி அடைய செய்து விடும். புகுந்த வீட்டுடன் எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று உங்கள் மகளுக்கு அறிவுரை சொல்லி விட்டு அவர்களுடன் நீங்கள் பேசுங்கள். உங்கள் சம்மந்திகளுடன் பேசுவதை விட உங்கள் மருமகனுடன் பேசுங்கள். அவர் உங்கள் உணர்வுகளை புரிந்துக் கொண்டால் பிரச்சனை எளிதாக முடிவுக்கு வந்து விடும். விழாவை விட மார்க்கத்திற்கும் எங்கள் உணர்விற்கும் மதிப்பளியுங்கள் என்று கூறுங்கள். எங்களுக்கும் விழா கொண்டாட ஆசைதான். மார்க்கம் அதை விரும்பாததால் ஒதுங்கி நிற்கிறோம் என்பதை புரிய வையுங்கள்.

நிர்பந்தப்படுத்துபவர்கள் எதற்கும் அதே பாணியை கடைபிடிக்கவே செய்வார்கள். இன்றைய நிர்பந்தத்திற்கு பணிந்தால் அதையே காரணம் காட்டி அடுத்தடுத்த பிள்ளைகளுக்கும் இதே போக்கை மேற்கொள்ள துணிவார்கள். எனவே முடிந்தவரை அவர்களுடன் பேசி இத்தகைய போக்கை தவிர்ப்பதே பிற்காலங்களுக்கும் சரியான தீர்வாக அமையும்.
எத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கும் அவர்கள் கட்டுப்படும் நிலையில் இல்லை என்றால் அவர்களின் போக்குக்கு விட்டு விடுங்கள். உங்கள் எண்ணங்களை அறிந்த இறைவன் உங்களை குற்றம் பிடிக்க மாட்டான். இதற்காக மகளின் வாழ்வுடன் விளையாடும் போக்கை அடியோடு தவிர்க்கவும்.

--------------------------------

396) கேள்வி: பெண்கள் காலில் தங்கத்தில் மெட்டி அணியலாமா? விளக்கம் தரவும்.

பொதுவாக அனுமதிக்கப்பட்ட எதுவொன்றின் மூலமாகவும் ஆண்களோ - பெண்களோ தங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம். தங்கம் ஆண்களுக்கு விலக்கப்பட்டு பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். எனவே தங்கத்தை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் மாற்றி உடம்பில் எந்தப்பகுதியில் வேண்டுமானாலும் அணிந்துக் கொள்ளலாம். அந்த வகையில் பெண்கள் தங்க மெட்டி - தங்க கொலுசு உட்பட எதுவும் அணியலாம் தடையொன்றும் இல்லை.

அதே சமயம் மெட்டி அணிவதற்காக சொல்லப்படும் காரணங்களை நாம் அலட்சியப்படுத்த வேண்டும். இந்து மதப் பெண்களில் திருமணமான பெண்கள் மட்டும் தான் மெட்டி அணிவார்கள். திருமணமாகி விட்டது என்பதன் அடையாளங்களில் ஒன்றாக அதை கருதுகிறார்கள். அம்மி மிதித்து மெட்டி அணிய வேண்டும் என்ற சடங்கை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். ஒரு முஸ்லிம் பெண் இந்த சடங்குகளில் எதுவொன்றோடும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. மெட்டி என்பது விரல்களில் அணிந்து அழகு படுத்திக் கொள்ளும் ஒரு நகை என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் இருக்க வேண்டும். திருமணமாகாத கன்னிப் பெண்கள். திருமணமானவர்கள்இ விதவைப் பெண்கள்இ விவாகரத்துப் பெற்றவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இதை அணியலாம்.

மெட்டியை மாற்றுமதத்தவர்கள் முக்கியமாக கருதுவதால் அதை நாம் அணியக் கூடாது என்று சிலர் கூறுவது பொருந்தக் கூடிய வாதமல்ல. பிற மதத்தவர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சடங்கையும் காரணத்தையும் வைத்துள்ளார்கள். பெண்கள் கைகளில் அணியும் வளையல்கள் கூட நிரந்தரமில்லாத போக்கே அங்கு நீடிக்கின்றது. கணவன் இறந்தவுடன் குங்குமத்தை மட்டும் அழிக்காமல் கையோடு கையை அடித்து வளையல்களை நொறுக்கும் காட்சியை நாம் அறிந்துள்ளோம். பெண்கள் தலையில் பூ வைப்பதற்கும் அங்கு காரணம் உண்டு.

அதையெல்லாம் நாம் கருத்தில் எடுத்துக் கொண்டால் சில உடைகள் உட்பட எதையும் நம்மால் அணிய முடியாமல் போய்விடும். எனவே மார்க்கம் அனுமதித்த பொருள் என்றால் அதை முஸ்லிம் பெண்கள் அணியலாம் பிரச்சயையொன்றும் இல்லை.

-----------------------------

397) 'விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர (வேறு பத்தினிப்பெண்ணைத்) திருமணம் செய்யமாட்டான்இ (இவ்வாறே) விபச்சாரியை-  விபச்சாரம் செய்பவனையோ அல்லது இணைவைப்பவனோ தவிர (பரிசுத்தமானவேறு யாரும்) திருமணம் செய்ய மாட்டாள் இ(த்தகையோரைத் திருமணம் செய்வ)து இறை நம்பிக்கையாளர்களின் மீது தடுக்கப்பட்டுள்ளது' என்று குர்ஆன் கூறுகிறது. எத்தனையோ குடும்பங்களில் ஒழுக்கமான பெண்களுக்கு குடி விபச்சாரம் போன்ற கெட்ட பழக்கங்கள் உள்ள கணவர்கள்  அமைகின்றார்கள். அப்படி என்றால் இவர்களின் மனைவிமார்களும் இவர்களைப் போன்றவர்களா?

ஒழுக்கமான பெண்களுக்கு கெட்ட கணவர்கள் அமைய மாட்டார்கள் என்பதோ விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு விபச்சாரிகள் தான் மனைவியாக அமைவார்கள் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் மனைவியை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்பதோ அவள் கெட்டுப் போய் இருப்பாளோ என்று மன உளைச்சலுக்கு ஆளாகி அவள் வாழ்வை பாழ்படுத்த வேண்டும் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.

வேறு என்ன கூறுகிறது அந்த வசனம்!

ஒரு ஆண் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும் தனக்கு வரும் மனைவி நல்லவளாக - ஒழுக்கமுள்ளவளாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். விபச்சார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் திருமண வாழ்க்கையில் இணைகிறாள் என்றால் அவளும் கூட தன் கணவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் பிற பெண்களை மனதால் கூட தீண்டாதவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.

அவர்கள் அவ்வாறு விரும்பினாலும் அப்படி விரும்புவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை என்றே அந்த வசனம் கூறுகிறது. ஒருவன் விபச்சாரம் செய்பவனாகவோ கெட்டவனாகவோ இருக்கும் போது அவன் தன்னைப் போன்றுள்ள ஒரு விபச்சாரியையோ அல்லது கெட்டவளையோ தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் அது தான் சரியான அளவுகோல் மனைவி ஒழுக்கமானவளாக அமைய வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் முதலில் அவன் எல்லா ஒழுங்கீனங்களையும் விட்டு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளட்டும் என்பதே நீங்கள் எடுத்துக் காட்டிய வசனம் சொல்லும் அறிவுரையாகும்.

கணவனின்றி தவறான வழியில் வாழும் ஒரு பெண் திருமணத்தை நாடும் போது தனக்கு கணவனாக வருபவன் யோக்கியனாக இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஏனெனில் தவறான வழியில் உழலும் அவளுக்கு இப்படிப்பட்ட கணவன் தகுதியானவனல்ல. அதிகபட்சமாக அவளைப் போன்றே நாற்றமெடுத்த ஒருவனைத் தான் அவள் மணமுடிக்க வேண்டும் என்பதே அந்த வசனம் முன் வைக்கும் வாதமாகும்.

தவறான வழியில் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் எத்துனையோ ஆண்களுக்கு ஒழுக்கமும் - கண்ணியமும் மிக்க மனைவிகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தன் மனைவியின் ஒழுக்கத்தையும் நன்நடத்தையையும் பார்த்து அத்தகைய கணவர்கள் வெட்கி தலைகுனிந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

நல்ல கணவர்களுக்கு கெட்ட மனைவி அமைந்து விடுவதும் நடக்காமலில்லை. ஒரு ஆண் கறைப்பட்டால் அது அவனோடு போய்விடும். பெண் கறைப்பட்டால் அது அவளது குடும்பத்தையே பாதிக்கும் என்பதால் நல்ல கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட தீய நடத்தையுள்ள பெண்கள் சிந்தித்து தங்கள் தவறுகளிலிருந்து விடுபட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். நல்ல கணவர்கள் இத்தகைய மனைவிகள் விஷயத்தில் பொறுமையை மேற் கொள்ள வேண்டும் என்பதற்கு நபிமார்களான நூஹு மற்றும் லூத் (அலை) ஆகியோரிடம் பாடம் உள்ளது.  (மேலதிக விளக்கத்திற்கு 289வது கேள்விக்கான பதிலை பார்க்கவும்)

-------------------------------

398) கேள்வி: நகைக்கு ஒவ்வொரு வருடமும்; ஸகாத் கொடுக்க வேண்டுமா? நாண் சிலதை தான் பாவிக்கிறேன் . நான் 2 வரூடம் கொடுத்து வந்தேன். விளக்குங்கள் பாத்திமா லண்டன்.

நீங்கள் பாவிக்கக் கூடிய நகையாக இருந்தாலும் சரி, பீரோ, பேங்க் லாக்கர் போன்ற இடங்களில் வைத்து பாதுகாக்கும் நகையாக இருந்தாலும் சரி அவை உங்கள் சொத்தேயாகும். அத்தியாவசிய தேவைக்கு போக மீதமுள்ள மொத்த சொத்துக்கும் கணக்கிட்டு வருடந்தோரும் ஜகாத் கொடுக்கத் தான் வேண்டும். தங்க நகைகளைப் பொருத்தவரை அவை மேலதிக சொத்துக்களாகவே இஸ்லாம் கருதுகிறது. எனவே தங்க நகைகள் அனைத்திற்கும் ஜகாத் கொடுக்கத் தான் வேண்டும். கொடுக்காமல் விடுபட்டிருந்தால் அவைகளுக்கும் கணக்கிட்டு கொடுத்துவிடுங்கள். நீங்கள் வசிக்கும் லண்டனில் ஜகாத் பெற தகுதியுள்ளவர்களை தேட முடியாத நிலை இருந்தால் உங்கள் தாய் மண்ணான இலங்கையில் ஜகாத் தேவையுள்ளவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுப்புங்கள். ஒரு முறை கொடுத்து விட்டு நிறுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

ஆண்டுதோறும் கணக்கிட்டு கொடுக்கப்படத்தான் வேண்டும்.

---------------------------------

399) கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும்.. ஹலோ..நான் நஜ்மிலா இஸ்மின் நெதர்லாந்திலிருந்து..ஒரு விஷயம் பற்றி விளக்கம் பெற விரும்புகிறேன்.. நீங்கள் எனக்கு உதவ முடியும் என்று நம்புகிறேன்.. அதாவது நான் கற்பமாக இருந்தேன், பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் எனது கணவர் என்னருகில் இருந்தார். எங்களது குடும்ப நண்பர் ஒருவர் இது ஹராம்இ இவ்வாறு கணவர் பிரசவ நேரத்தில் உடனிருப்பது தவறு என்று சொன்னார். எனது கேள்வி.. ஒரு கணவர் தனது மனைவியின் அருகில் பிரசவ நேரத்தில் இருக்கலாமா? கூடாதா? விளக்கம் தரவும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 

நல்லக் கேள்வி. கணவன் - மனைவிக்கு மத்தியிலுள்ள உறவு என்பது படுக்கையறை உறவு மட்டுமல்ல. கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அனைத்து வகையிலும் உதவ வேண்டிய உறவே கணவன் மனைவிக்கு மத்தியில் இருக்கும் சிறந்த உறவாகும்.

சமைப்பதற்கு பெண், சாப்பிடுவதற்கு ஆண். துவைப்பதற்கு பெண், உடுத்துவதற்கு ஆண் என்று குடும்பத்தில் பெண்ணை உழைப்பாளியாகவும் ஆணை முதலாளியாகவும் ஆக்கி வைத்துள்ள போக்கு ஆணாதிகத்தின் குறியீடாகும்.  இதனால் தான் மனைவியின் கஷ்டத்தை அனேக ஆண்களால் புரிந்துக் கொள்ள முடியாமலே போய் விடுகிறது.

நபி(ஸல்) வீட்டில் இருந்தால் எங்களோடு குடும்பப் பணிகளில் ஒத்தாசை செய்வார்கள். பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு செல்வார்கள் என்று அன்னை ஆயிஷா(ரலி) சொல்கிறார்கள் (புகாரி)

இதுதான் சிறந்த குடும்பத்திற்கு அடையாளம்.

உடலோடு கலந்து விடுவதுதான் இல்லறம் என்று இல்லறத்திற்கு வெறும் பாலியல் சாயம் மட்டும் பூசாமல் அது உள்ளத்தோடும்இ உணர்வோடும் கலந்துப் போகக்கூடிய ஒரு வாழ்க்கை என்பதை ஆண் மகன்  உணர்ந்தால் அந்த கணவன் மனைவிக்கு மத்தியில் ஆயிரம் சந்தோஷங்கள் பூவாய் மலர்ந்துக் கொட்டும். இந்த சந்தோஷம் எப்போது சாத்தியம் என்றால் மனைவியை புரிந்துக் கொண்டு அவளுக்காக வாழ்வதில் தான்.

மாதவிடாய் சந்தர்பங்களில், குழந்தை பெற்றெடுக்கும் சந்தர்பங்களில் பெண் அனேக துன்பத்திற்கு ஆளாகிறாள். இந்த துன்பங்களை கணவன் கண்டு அறிய முடிவதில்லை.  மனைவி குழந்தை பெற்றெடுக்கும் போது கணவன் அருகில் நின்று பார்க்க வேண்டும். அப்படி நடந்தால் அந்த சந்தர்பத்தில் மனைவிக்கு அது ஒரு பெரும் ஆருதலாகவும்இ அவளை புரிந்துக் கொண்டு கூடுதலாக நேசிப்பதற்கு கணவனுக்கு ஒரு தூண்டுதலாகவும் அது இருக்கும் என்று உளவியல் துறை அறிஞர்களும், டாக்டர்களும் கருதுகிறார்கள். ஒரு குழந்தைக்கும் அடுத்து குழந்தைக்கும் போதிய இடைவெளி விட இது வழிவகுக்கும் என்பதும் அவர்களின் முடிவாகும்.

இல்லறத்தில் ஒருவருடன் ஒருவர் கலந்து இரண்டற ஆகிவிட்ட பிறகு 'பிரசவ நேரத்தில் கணவன் - மனைவியின் பக்கத்தில் இருப்பது ஹராம்' என்பதற்கு எதை ஆதாரமாக எடுத்துக் காட்டுவார்களோ தெரியவில்லை.

உங்கள் குடும்ப நண்பர் எங்கோ வெளியில் கேள்விப்பட்டதை உங்களிடம் கூறி இருக்கலாம். இஸ்லாமிய சட்டம் அதை ஹராமாக்கியுள்ளது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை.

----------------------------------

400) கேள்வி: நோன்பில் இறந்து போவோருக்கு சொர்க்கம் என்று சொல்கிறார்களே அது உண்மையா?

நோன்பில் இறந்துப் போவோருக்கு, ஹஜ்ஜில் இறந்துப் போவோருக்கு, மக்காவில் இறந்துப் போவோருக்கு, இன்னும் சில நாட்களைக் குறிப்பிட்டு இந்த நாட்களில் இறந்துப் போவோருக்கெல்லாம் சுவர்க்கம் என்ற நம்பிக்கை பரவலாக நம் மக்களிடம் இருப்பதைப் பார்க்கிறோம். அல்லாஹ்விற்காக போர்களம் சென்று தன்னுயிரை அற்பணிக்கும் உயிர் தியாகிகளைத் தவிர மற்ற நாட்களில் மரணிப்பவர்களுக்கு சுவர்க்கம் என்ற நம்பிக்கையெல்லாம் ஆதாரமற்ற வெறும் யூகமே - நம் மக்களின் கண்டுபிடிப்பேயாகும்.

நோன்பில் நோன்பே வைக்காதவர்கள் கூட இறந்துப் போவார்கள் என்பதையெல்லாம் இந்த மக்கள் சிந்தித்தால் இந்த நம்பிக்கைகளைத் தூக்கி எறிந்து விடுவார்கள்.

-----------------------------------

401) கேள்வி: சலாம் சொல்லக் கூடாத சமயம் எது? சாப்பிடும் போது சலாம் சொல்லலாமா..? 

மலம் சிறுநீர் கழிக்கும் சந்தர்பங்களைத் தவிர சலாம் சொல்லக் கூடாத நேரம் என்றெல்லாம் எதுவுமில்லை.

மல ஜலம் கழிக்கும் போது பேசிக் கொள்ளும் மனிதர்களை அல்லாஹ் வெறுக்கிறான் என்று ஒரு செய்தியுள்ளது. (நஸயி) பேசிக் கொள்ளக் கூடாது என்பதிலிருந்தே அந்த சந்தர்பங்களில் சலாம் சொல்லக் கூடாது என்பதை விளங்கலாம்.

நபி(ஸல்) சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் சலாம் சொன்னார். நபி(ஸல்) சிறுநீர் கழித்து முடியும் வரை பதில் சொல்லாமல் தன் தேவை முடிந்ததும் என்னை இந்த நிலையில் பார்த்தால் சலாம் சொல்லாதே.. என்று சொன்ன செய்தி முஸ்லிமில் வருகிறது.

இது தவிர மற்ற எந்த சந்தர்பங்களிலும் சலாம் சொல்லிக்கொள்ளலாம். சாப்பிடும் போது சலாம் சொல்ல தடையில்லை.

-----------------------------------

402) கேள்வி: அந்த 72 கூட்டதினர் என்றால் என்ன? யார் அவர்கள்?

மார்க்க அறிவற்ற நிலை, பிரித்தாளும் சூழ்ச்சி, பதவிமோகம் போன்ற அனேக காரணங்களுக்காக சிலரால் சமுதாயம் கூறுபோடப்படுகிறது. அதை சுட்டிக் காட்டி எச்சரித்து முறைப்படுத்தும் செய்தியே நபி(ஸல்) அவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட அந்த செய்தியாகும்.

பனு இஸ்ரவேலர்கள் (மூஸாவின் சமுதாயம்) 71 பிரிவானார்கள். நஸாராக்கள் (ஈஸாவின் சமுதாயம்) 72 பிரிவானார்கள். எனது சமுதாயம் 73 பிரிவாக பிரியும். நானும் என் தோழர்களும் இன்றைக்கு எப்படி இருக்கின்றோமோ அப்படி இருப்பவர்களைத் தவிர பிற 72 கூட்டம் நரகம் செல்லும் என்ற முன்னறிவிப்பு அந்த செய்தியில் உள்ளது. முஸ்லிம் உம்மத்துக்கு உள்ளேயே தம்மை தனிமைப்படுத்தி, தனிக் கூட்டம் கூட்டி, அரசியல் காரணங்கள் உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக மக்களை பிரித்து வைத்திருக்கும் ஒவ்வொருவரும் 73வது கூட்டம் நாம் தான் என்று தமக்கு தாமே முத்திரைக் குத்திக் கொள்கிறார்கள்.

நபி(ஸல்) வாழ்ந்துக் காட்டியப்படி ஒருவரோ ஒரு குழுவோ இங்கு வாழ்ந்தாலும் கூட அவர்கள் தங்களை அந்த 73வது கூட்டமாக அடையாளம் காட்ட அனுமதியில்லை. அந்த அறிவிப்பு சுவர்க்கம் செல்ல தகுதியான ஒரு குழுவை மறுமையில் இறைவன் பிரித்தெடுப்பதைத் தான் கூறுகிறதே தவிர இந்த உலகில் குரூப்பிஸம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பதை அனுமதித்து வந்த அறிவிப்பல்ல.   இந்த செய்தி தவறாக விளங்கப்பட்டதால் தான் அனைத்து பிரிவினருமே தங்களை 73வது கூட்டம் என்று கூறிக் கொள்கிறார்கள்.

உண்மையில் சமுதாயப் பிரிவினை என்பது ஒரு பிரிவினர் மற்றவர் மீது ஏதோ ஒரு விதத்தில் துன்பம் விளைவிக்கும் போக்கையே ஏற்படுத்தும். அதனால் 73வது கூட்டம் நாம் தான் என்று கூறிக்கொள்பவர்கள் பிறர் மீது ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தவே செய்கிறார்கள்.

உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் அளிக்கும் துன்பத்தை வேறு சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்'' எனும் (திருக்குர்ஆன் 6:65)

இந்த வசனத்தை நாம் ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். உம்மத் பல குழுக்களாக பிரியும் போது சிலர் மற்ற சிலரால் துன்பத்துக்குள்ளாகுள்ளாவார்கள் என்ற எச்சரிக்கையை இறைவன் இந்த வசனத்தில் முன் வைக்கிறான்.

இந்த வசனத்தின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி பிரிவினையை சரிகாண்பவர்கள் பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவதையோ - துன்பம் விளைவிப்பதையோ தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்பதை நாம் கண்டு வருகிறோம்.

எனவே எந்த ஒரு ஆதாரமும் சமுதாய பிரிவினையை - கொள்கை ரீதியாகவோ இன்ன பிற காரணங்களுக்காகவோ பிரிவதை அனுமதிக்கவேயில்லை.

மேலும் நேர்வழிக்காக தொடர்ந்து பிரார்த்திக்க கற்றுக் கொடுக்கிறான் இறைவன். நேர்வழிக்காக தொடர்ந்து பிரார்த்திக்க கடமைப்பட்ட முஸ்லிம் நான் நேர்வழிப் பெற்றுவிட்டேன். 73வது கூட்டத்தில் ஐக்கியமாகி விட்டேன் என்று எப்படிக் கூற முடியும்?

'இறைவா.. உன் கோபத்திற்குள்ளானவர்கள், வழிதவறியவர்கள் சென்ற வழியல்லாத நீ அருள் புரிந்தவர்களின் வழியில் என்னை நடாத்து' என்ற பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்யும் காலமெல்லாம் நான் நேர்வழியைப் பெற்று விட்டேன் என்று இருமாப்புக் கொள்ளும் தகுதியை இழக்கிறான்.

மறுமையேஇ யார் நேர்வழிப் பெற்றவர்கள், யார் வழித்தவறி சென்று பாழ்பட்டுப் போனவர்கள் என்பதை துள்ளியமாக தீர்மானிக்கும் இடமாகும். அந்த 73வது கூட்டம் அங்கு பிரித்துக் காட்டப்படும். அதுவரை அந்தக் கூட்டத்தாருடன் மறுமையில் இணைவதற்காக இறைவன் கற்றுக் கொடுத்துள்ள பிரார்த்தனையை செய்துக் கொண்டு குர்ஆன் சுன்னா அடிப்படையில் நடந்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் நமது கடமை.
அந்த 72 பிரிவினர் யார் என்றெல்லாம் நம்மால் தீர்க்கமாக சொல்ல முடியவில்லை. நபி(ஸல்) அவர்களின் மறைவுக்கு பிறகு ஏராளமான பிரிவுகளை இந்த முஸ்லிம் உம்மத் கண்டுள்ளது. அவற்றில் தோன்றி உடன் மறைந்தவையும்இ சில - பல காலம் நீடித்து மறைந்தவையும், இன்று வரை நீடிப்பவையும் உண்டு. பிரிவென்று நாம் கருதுபற்றை கணக்கிட்டால் அவை 72யும் கடந்து செல்லும். நபி(ஸல்) எந்த நோக்கத்தில் 73 என்ற எண்ணிக்கையை குறிப்பிட்டார்கள் என்பது ஆய்வுக்குரியதாகும்.

முஸ்லிம் சமுதாயத்திலிருந்து தம்மை பிரித்துக் காட்டிக்கொள்வதை விடுத்து உம்மத்தின் அங்கமாக இருப்பதே நமது கடமையாகும். எந்தக் கூட்டம் என்றும் முத்திரைக் குத்திக் கொள்ள வேண்டாம்.

---------------------------

403) கேள்வி: சிவப்பு நிறத்தில் ஆடை அணியலாமா?

'உஸ்புர்' என்ற ஒருவித பழுப்பு நிற (காவி) உடை உடுத்துவதைத்தான் நபி(ஸல்) தடுத்துள்ளார்கள். ஆண்களுக்கு பட்டு தடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வேறந்த நிரமும் தடுக்கப்படவில்லை.

நபி(ஸல்) சிவப்பு நிற உடை உடுத்தியிருந்தார்கள். அது அவர்களுக்கு மிகவும் அழகாக இருந்தது என்று அன்னை ஆய்ஷா(ரலி) அறிவிக்கும் செய்தி திர்மிதியில் வருகிறது. எனவே தாராளமாக சிவப்பு வண்ணத்தில் உடை உடுத்தலாம்.

--------------------------

404) கேள்வி: தங்களின் கேள்வி பதில் பகுதியில் ஒரு நண்பர் மனைவியின் மார்பில் கணவன் பால் குடிக்கலாமா? என்று கேட்டிருந்தார். அதற்கு நீங்கள் இதற்கான பதிலை முன்னரே கேள்வி பதில் பகுதியில் வெளியிட்டுள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும் என பதிலளித்துள்ளீர்கள், நான் தேடிப்பார்த்த வரையில் அது சம்பந்தமாக தங்கள் தொகுப்பில் எதுவும் கிடைக்க வில்லை. 'தேடுக' பகுதி மூலமும் முயற்சி செய்துவிட்டேன் பலனில்லைஇ எனவே இதற்கான பதிலை அடுத்த தொகுப்பில் இடம் பெறச் செய்யவும்.

மனைவியின் மார்பில் வாய் வைத்து பால் குடித்தால் மனைவியின் பால் கணவனின் வயிற்றுக்குள் சென்று விடுவதால் தாய் மகன் உறவு ஏற்பட்டு விடுமோ என்பது பெருவாரியான முஸ்லிம்களுக்கு உள்ள சந்தேகம். உணர்ச்சி மேலீட்டால் அந்த காரியத்தை செய்து விட்டு பிறகு என்ன செய்வதென்று வழி தெரியாமல் தவிக்கும் முஸ்லிம்கள் அனேகம் பேர். சிலர் இது பற்றி மார்க்க தீர்ப்பு பெறுவதற்காக அரபு மதரஸாக்களை நாடுகிறார்கள். மதரஸாக்கள் பெரும்பாலும் மத்ஹபை சரிகண்டுக் கொண்டு இருப்பதால் நேரடியாக குர்ஆன் சுன்னாவைப் பார்த்து பதிலளிக்காமல் எடுத்தவுடன் 'ஆம் கணவன் மனைவி என்ற உறவு விலகி தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடும்' என்று ஃபத்வா கொடுத்து விடுகிறார்கள். இத்தகைய ஃபத்வாக்களால் மார்க்க தீர்ப்பு கேட்ட சிலரது வாழ்க்கை பாழ்பட்டு போய் விட்டதை யாரும் மறுக்க முடியாது.

இத்தகைய ஃபத்வாக்கள் வருவதால் 'மார்க்க தீர்ப்பாவது மண்ணாங்கட்டியாவது' என்று மார்க்கத்தை அலட்சியப்படுத்தி விட்டு சந்தேகத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் காரியத்தை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லறத்தில் சேரும் அந்த பொழுதுகள் எத்துனை உணர்ச்சிப் பூர்வமானவை என்பதை விளங்காதவர்கள் தான் இத்தகைய முடிவுகளுக்கு வருவார்கள்.

தனக்கென்று ஒரு பெண்ணை மனைவியாக சொந்தப்படுத்திக் கொண்ட ஒரு ஆணுக்கு 'அந்த பொழுதில்' 'அந்தக் காரியத்தை செய்யாதே' என்று தடை விதிக்கப்பட்டிருந்தால் இதில் நூறு சதவிகிதமான ஆண்கள் வரம்பு மீறிவிடவே செய்வார்கள்.

மனைவி உங்களின் ஆருதலுக்குரியவள் என்று சொல்லியுள்ள இறைவன் இதற்கு எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை. இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் வழியாகவும் தடையொன்றும் வரவில்லை.

ஆரம்ப காலங்களில் குழந்தைகளை செவிலித் தாய் (மாற்றுத் தாய்) இடம் கொடுத்து பால் கொடுத்து வளர்க்கும் முறை இருந்தது. (இன்றைக்கும் இங்கொண்றும் அங்கொண்றுமாக இது நடக்கின்றது) இப்படி பிற பெண்ணிடம் ஒரு குழந்தை பால் குடிப்பதால் பால் கொடுத்த அந்த பெண்ணிற்கும் பால் குடித்த இந்தக் குழந்தைக்கும் உள்ள உறவை இஸ்லாம் தாய் - மகன் என்ற உறவாக்கியது. பால் குடித்த அந்த குழந்தை வளர்ந்தால் தனக்கு பாலூட்டிய அந்த பெண்ணையோ அல்லது அந்த பெண்ணிடம் பாலருந்திய பிற பெண்ணையோ இந்த ஆண் திருமணம் செய்ய முடியாது.

இதற்கெல்லாம் காலவரையறை என்ன? எப்போது பால் குடித்தாலும் தாய் மகன் என்ற உறவு ஏற்பட்டு விடுமா..? என்பதெற்கெல்லாம் இஸ்லாம் பதில் சொல்லி விட்டது. தாய் மகன் என்ற உறவு ஏற்பட வேண்டுமென்றால் ஒரு குழந்தை இரண்டு வயதுக்குட்பட்ட காலங்களில் எத்துனை பெண்களிடம் பாலருந்தி இருந்தாலும் அத்துனைப் பெண்களும் அந்த குழந்தைக்கு தாய் என்ற அந்தஸ்த்தில் வந்து விடுவார்கள். இரண்டு வயதை கடந்த பிறகு எந்த பெண்ணிடம் அந்த குழந்தை பால் குடித்தாலும் அவர்களுக்கு மத்தியில் தாய் - மகன் என்ற உறவு ஏற்படாது என்பதுதான் இஸ்லாம் விளக்கியுள்ள பதிலாகும்.

குழந்தைக்கு இரண்டு ஆண்டுகள் பூரணமாக பெற்றத் தாய் பாலூட்ட வேண்டும் (அல் குர்ஆன் 2:233)

பால்குடி உறவு ஏற்படுவதற்கான காலகட்டம் இந்த இரண்டு ஆண்டுகள் தான். இதை கீழ் வரும் நபிமொழி அறிவிக்கின்றது.

நபி(ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என் அருகில் ஓர் ஆண் இருந்தார். (அவரைக் கண்டதும்) நபி(ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது போல் தோன்றியது. அ(ந்த மனிதர் அங்கு இருந்த)தை நபியவர்கள் விரும்பவில்லை என்று தெரிந்தது. அப்போது நான், 'இவர் என் (பால்குடி) சகோதரர்'' என்றேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியினால் (குழந்தைப் பருவத்தில் அருந்தியிருந்தால்) தான்'' என்று கூறினார்கள். (ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த செய்தி புகாரியில் 5102.ல் இடம் பெறுகிறது)

குழந்தை பாலருந்தும் பருவத்தில் பசியின் காரணத்தால் வயிற்றை சென்றடையும் போதுதான் தாய் மகன் என்ற உறவு ஏற்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (உம்மு ஸலமா(ரலி) திர்மிதி)

இதே கருத்து இன்னும் சில ஹதீஸ்களிலும் வருகின்றது.

எனவே பால்குடி மறக்கடிக்கப்படும் இரண்டாண்டுகளுக்குள் ஏற்படும் இந்த உறவை கணவன் மனைவிக்கு பொருத்திக் காட்டுவது பெரும் அறியாமையாகும். மனைவியிடம் பால் குடித்தால் அவள் மனைவி என்ற அந்தஸ்த்தில் தான் இருப்பாள். இது இல்லறத்திற்கு உட்பட்ட காரியம் என்றே கருதப்படும்.

ஒரு விஷயத்தில் மட்டும் நாம் எச்சரிக்கையாக இருந்துக் கொள்ள வேண்டும். குழந்தையை பட்டினிப் போட்டுவிடக் கூடாது.

-------------------------------------

405) கேள்வி:  ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாக உணர்கிறேன். அதாவது யாரோ எனது முழு உடலையும் இறுக்கி அழுத்தி பிடித்துக் கொள்வதாக சில நிமிடங்கள் அவதிப்படுகிறேன். இந்த நேரத்தில் எனது வாய்இ கைகள் மற்றும் கால்கள் முற்றிலும் செயலிழந்து விட்டது போல் உணர்கிறேன். இது ஜின் அல்லது சைத்தானின் சேட்டையா? விளக்கவும். 

இந்த நிலைக்கு ஆட்படும் பலர் உடனடியாக இந்த முடிவுக்கே வந்து விடுகிறார்கள். அதாவது இது ஜின்கள் - ஷைத்தான்களின் காரியம் தான் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அதனால் அவர்களின் உள்ளத்தை ஒரு வித பயம் கவ்விக் கொள்கிறது. 'தன் மீது ஊமை பிசாசு ஏறி உட்கார்ந்துக் கொண்டது' என்று கூறுபவர்களும் உண்டு.

கை கால்களை அசைக்கமுடியாமல், பக்கத்தில் யாராவது இருந்தால் அவர்களைக் கூட அழைக்க முடியாமல், ஒரு இக்கட்டான அழுத்தம் சில நிமிடங்கள் நீடிக்கும்.

தூங்கும் போது தன்னையும் அறியாமல் இப்படியும் அப்படியுமாக புரண்டு படுத்து உறங்குபவர்கள் தான் உடல் கோளாறுகள் எதுவுமில்லாமல் உறங்குவார்கள். ஒரே பக்கமாக படுத்து உறங்குபவர்கள் உடம்பில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள். ஒரே பக்கமாக படுத்து உறங்குவதால் இரத்த ஓட்டங்களில் தடைப்பாடு - மாறுபாடு ஏற்படும் போதுதான் எழுந்ததும் உடல் வலி போன்றவற்றை உணர்வார்கள்.

உறக்கத்தில் ஏற்படும் கெட்டக் கனவு, அல்லது பயந்த உணர்வு, உங்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை, எத்துனை மணி நேரம் தூங்கினாலும் எழுந்தவுடன் தூக்கமே சரியில்லை என்ற உணர்வு, கண்கள் சிவந்து போதல் போன்ற அனேக மாறுபாடுகளுக்கு நமது உடல் கோளாறுகளே காரணமாகும். சில பொழுது மட்டும் இத்தகைய நிலையை உணர்ந்தால் அதற்கு முந்தைய பொழுது அவர்கள் சாப்பிட்ட உணவு காரணமாக இருக்கலாம்.

எனவே இது போன்ற நிலை தொடர்ந்தால் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். பிற பேய் - பிசாசு என்ற பயமெல்லாம் வெறும் வெத்துப் பேச்சாகும்.

அந்தத் தலைவரைப் பின்பற்ற வேண்டுமா? - 1 குர்ஆன் விளக்கம்

நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள் (இதன் மூலம்)இறைவன் உங்களை நேசிப்பான். உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன். நிகரில்லா அன்புடையவன் என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல் குர்ஆன் 3:31)

ஆலு இம்ரானுடைய 31வது வசனம் இது.

இந்த வசனம் என்ன சொல்ல வருகிறது என்பதை அதை படித்த மாத்திரத்தில் 'பளிச்' சென்று புரிந்துக் கொள்ளலாம். ஆனால் புரிகிறது என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளும் வசனம் அல்ல இது. அதன் வார்த்தை ஒவ்வொன்றையும் சிந்தித்து படிப்பினை பெற வேண்டிய வசனமாகும்.
இனி விரிவாக அணுகுவோம்.

நீங்கள் இறைவனை நேசித்தால் என்னை பின்பற்றுங்கள்.

மனிதன் சதாவும் எதையாவது ஒன்றை நேசித்துக் கொண்டிருக்கிறான். அந்த நேசத்தை ஏதோ ஒரு விதத்தில் அவன் வெளிபடுத்தியும் காட்டி விடுகிறான்.

பணத்தை நேசிக்கிறான், மனைவி மக்களை நேசிக்கிறான், உணவையும் - தூக்கத்தையும் நேசிக்கிறான் - மற்ற மற்ற சிலர் மார்க்கத்திற்கு விரோதமான - சமூக தீங்கைக் கூட நேசிக்கிறார்கள். குடி - சூது - கடத்தல் -  பொதை பொருள் - அன்னிய பெண்கள் என்று நேசம் பல எல்லைகளையும் கிளைகளையும் கொண்டுள்ளது.

நாம் நேசிக்கக் கூடிய மனைவியை பார்ப்போம். அந்த தருணங்களில் மனம் குதூகளிக்கும் முகம் அந்த குதூகளிபை வெளியில் காட்டி விடும்.

பணத்தை நேசிப்போம். அது கையில் கிடைத்தவுடன் முகம் அதன் அடையாளத்தை காட்டும்.

தீய காரியங்களை செய்ய துணியும்போது சமூகத்திலிருந்து மறைந்து அந்த காரியத்தை செய்கிறான் மனிதன். 'மறைந்துக் கொள்ளுதல்' என்பது அவன் நேசத்தை காட்டி விடுகிறது.

ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதலர்கள்களின்  அவசரமும் - துடிப்பும்; அவர்களின் நேசத்தை உலகிற்கு சொல்லி விடுகிறது.

தாயை கண்டவுடன் அவளை நேசிக்கும் குழந்தை தாவி தவழ்ந்து ஓடி வந்து அவள் மீதேறி தன் நேசத்தை வெளிபடுத்தும்.

புரிந்துக் கொண்ட - மனம் நிறைந்த நண்பர்கள் சந்திக்கும் போது சிரித்து மகிழ்ந்து ஆரத்தழுவி தங்கள் நேசத்தை உலகிற்கு காட்டுவார்கள்.

இப்படியாக நேசத்திலிருந்தும் அதை வெளிபடுத்திக் காட்டும் தன்மையிலிந்தும் விடுபட்ட மனிதர்கள் யாருமே உலகில் இல்லை.

இதே அடிப்படையில் இறைவனை நேசிக்கும் தன்மை மனித இயல்பில் கலந்துள்ளது. உலகில் வாழும் மக்களில் 95 சதவிகிதமானவர்கள் இறைவனை நேசிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அந்த நேசத்தில் தான் பெருத்த சிக்கல்களும் - முரண்பாடுகளும் தென்படுகின்றன.

முஸ்லிம்களாகட்டும், ஹிந்துக்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும், இன்னும் பிற மதத்தவர்கள், மொழிக் காரர்கள், நாட்டவர்கள் இவர்கள் அனைவருமே தன் தாயை - காதலியை - மனைவியை - நண்பர்களை - உற்றார் உறவினரையும் சுற்றத்தாரையும் நேசிக்கும் விதமும் அந்த நேசத்தை வெளி காட்டும் விதமும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. இதே மக்கள் இறைவனை நேசிக்கும் விதத்தையும் - அதை வெளி காட்டும் விதத்தையும் எண்ணிப்பாருங்கள்.!!!

முஸ்லிம்கள்.

இவர்கள் ஒரே இறைவனை மிக வலுவாக நேசிக்கக் கூடிய சமுதாயத்தவர்கள். ஆனால் இவர்களில் கணிசமானவர்கள் இறை நேசத்தின் ஆழத்தை புரிந்துக் கொள்ளக் கூடிய வழியை கற்காமல் அதில் பெரும் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகம் என்ற பெயரில் இறந்துப் போனவர்கள் மீதும் அவர்களின் சவக் குழிகளின் மீதும் - மத குருக்களாக கருதப்படும் ஹஜ்ரத்கள் - ஷேக்குகள் என்ற மனிதர்கள் மீதும் அளப்பறிய நம்பிக்கை வைத்து அவர்கள் சொல்லும்படியெல்லாம் நடப்பதே இறை நேசம் என்றெண்ணி ஓரிறை கோட்பாட்டில் விபச்சார தன்மையை ஏற்படுத்தி விடுகிறார்கள். அதிலேயே நிலைத்தும் நிற்கிறார்கள்.

ஹிந்துக்கள்.

இந்தியா என்ற மிகப்பெரும் மக்கள் தொகையை கொண்ட நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் வாழ்பவர்கள். மிகச் சிறந்த அறிவாளிகள் - பண்பாளர்கள் - கல்வியாளர்கள் - சிந்தனையாளர்கள் என்று இவர்களின் தரம் பெருகி இருந்தாலும் இவர்களின் இறை நேசத்தின் வெளிபாட்டை - ஆன்மீக வழிபாட்டை கவனித்தால் அந்த தரம் மிக்கவர்களா இப்படி என்று எண்ணத்தோன்றி விடும். ஆம். மிக உயர்ந்த படைப்பாகிய மனிதர்கள் தன்னோடு எந்த விதத்திலும் - நிலையிலும் ஒப்பிட்டே பார்க்க முடியாத - அந்த தகுதி அறவே இல்லா - தவற்றையெல்லாம் வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கல்லும் - மண்ணும் - மரமும் - மட்டையும் - மலமும் - பாம்பும் - எலியும் - பல்லியும் - பறவையும் - இவர்களின் இறைவனாகிப் போய் இவர்களை ஆதிக்கம் செய்துக் கொண்டிருக்கிறது.

கிறிஸ்துவர்கள்.

வழிகாட்ட வந்தவரையே வணங்கத்துவங்கியவர்கள். பிறப்பும் - பசியும் - தாகமும் - இயலாமையும் - பலவீனமும் - தூக்கமும் - துக்கமும் - எரிச்சலும் - கோபமும் - கடைசியில் இறப்பும் கொண்ட - மலஜல குடலை சுமந்துக் கொண்டு வாழ்ந்த ஒருவரை இறைவனின் சந்ததி என்றாக்கி - அவருக்கு இறை மகன் என்று பெயரிட்டு பின்னர் அவரை கல்லாக்கி - சிலையாக்கி சிலையை நேசிக்கவும் - வழிபடவும் துவங்கி விட்டார்கள்.

கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய நேசம்.

முரண்பாடுகள் கொண்ட இந்த அறியாமையை போக்க என்ன வழி? கற்றுக்கொடுப்பது என்பதை தவிர வேறு வழியில்லை. வலது கையால் உண்ணும் இயல்பான நிலையிலிருந்து மாறி இடது கையால் ஒரு குழந்தை உண்ணும் போது அங்கு அந்த குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது பெற்றோர்களின் பொறுப்பாகி விடுகிறது. அறிவிருந்தும் தெரிந்துக் கொள்ள சக்தியற்ற மாணவனுக்கு புரியும் விதத்தில் சொல்லிக் கொடுப்பது ஆசிரியரின் கடமையாகி விடுகிறது. அதே போன்று தான் இறை நம்பிக்கையும் இறை நேசமும் பாழ்பட்ட பழக்க வழக்கங்களால் கறை படியும் போது அதிலிருந்து அவற்றை தூய்மை படுத்தி மக்களுக்கு புரிய வைப்பது இறைவன் மீது கடமையாகி விடுகின்றது.

அந்த பாடத்தை செவ்வனே மக்களுக்கு போதிக்கும் பணியை இறைவன் இந்த வசனத்தில் துவங்குகிறான்.

'இறைத்தூதரே நீர் கூறும். மக்களே! நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று'

இறைவனை நேசிப்பதற்கும் இவரை பின்பற்றுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்ற ஆச்சரியம் கலந்த கேள்வி இங்கு எழலாம். அர்த்தமுள்ள கேள்விதான். ஒரு அடிப்படையை புரிந்துக் கொண்டால் இதற்கு விடை கிடைத்து விடும்.

இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்று சொல்லப்பட்டவரும், சொல்பவரும் ஒரு சாதாரண மனிதராக மட்டுமில்லை. அவரை இறைவன் தன் தூதராக தேர்ந்தெடுத்துள்ளான். இறைத்தூதர் என்ற நிலையிலிருந்து அந்த வார்த்தை சொல்லப்படுகிறது. சொல்லக்கூடிய மனிதரை மட்டும் பார்க்காமல் அவருடைய தகுதியையும் பார்க்க வேண்டும்.

அவர் ஒரு இறைத்தூதர். இறைவனை பற்றி மக்களுக்கு அறிவித்து அவன் விரும்பும் விதத்தில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பணிக்கப்பட்ட ஒரு உயர்ந்த மனிதர் அவர். தன் மீது விதிக்கபட்ட பணியில் அவர் ஒரு கடுகளவேனும் குறைப்பாடு செய்யவில்லை என்பதால் இறைவனை அறியும் விதத்தையும் - அவன் மீதான நேசத்தையும் அவரை பின்பற்றியே பெற்றுக் கொள்ளலாம் என்ற சூழ்நிலை இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.

மனிதர்களே! நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்ற வார்த்தை முஹம்மத்(ஸல்) அவர்கள் தன் விருப்பத்தில் சொன்ன வார்த்தையல்ல. அந்த வசனத்தில் 'நீர் சொல்வீராக' என்ற ஏவல் வந்துள்ளது. அதாவது இப்படி சொல்ல வேண்டும் என்ற கட்டளை இறைவனால் பிறப்பிக்கப்படுகிறது. இறைவனே அப்படி சொல்ல சொன்னதிலிருந்து அவனை அடையும் வழியை எவ்வளவு துள்ளியமாக முஹம்மத்(ஸல்) பெற்றுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.

அந்த வழியை முஹம்மத் அவர்களை தவிர வேறு யாரும் பெறவில்லையா என்ற கேள்வி அடுத்து எழலாம். அனேக மக்கள் பெற்றிருந்தனர். அந்த மக்கள் அனைவருமே இறைத்தூதர்கள் என்ற அந்தஸ்தில் இருந்தவர்கள் தான். ஆனால் அவர்கள் அனைவரும் முஹம்மத் அவர்களின் வருகைக்கு முன்னால் தம் தமது சமூகங்களுக்கு மட்டுமே வழிகாட்ட அனுப்பப்பட்டார்கள். பணியின் வட்டம் சிறியதாக இருந்ததால் அவர்களின் வாழ்க்கை முறையை பாதுகாக்கும் ஏற்பாடுகள் குறைவாகவே இருந்தன. அது மட்டுமின்றி அந்த இறைத்தூதர்களின் மறைவுக்கு பிறகு அந்தந்த மக்கள் இறைத்தூதர்கள் கொண்டு வந்த வழிமுறையில் - போதனையில் பல மாற்றங்கள் செய்து புதிய வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டனர். (இதற்கு உதாரணமாக கிறிஸ்துவத்தை குறிப்பிடலாம். இயேசு கொண்டு வந்த கொள்கை இன்றைக்கு பைபிளிலோ - கிறித்தவ உலகிலோ இல்லை. இயேசுவிற்கு பிறகு பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டதாக சொல்லிக் கொண்ட பவுல் என்பவரே   இன்றைய கிறித்தவத்தை உருவாக்கினார் இதற்கு பைபிளிலிருந்து அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்து வைக்க முடியும். ஒரு பெரிய மதத்தின் நிலையே இதுவென்றால் அவருக்கு முன்னால் வந்தவர்கள் பற்றிய நிலையை நாம் சாதாரணமாக புரிந்துக் கொள்ளலாம்.)
இன்னும் தெளிவாக சொல்லப் போனால் முஹம்மத் என்ற இறை;தூதரின் வருகைக்கான அவசியத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களே அவருக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தான். அவருக்கு முன்னால் வந்த இறைத்தூதர்களின் வாழ்க்கை முறை பாதுகாக்கப்பட்டிருந்தால் இன்னுமொரு தூதர் அவசியமில்லாமலே போயிருக்கும். இப்படி ஒரு நிலை இல்லாமல் போனதால் தான் முஹம்மத் அவர்களின் வருகை தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

முஹம்மத்(ஸல்) அவர்களின் பணி உலகலாவிய பணியாக இருந்ததால் அவர்களின் வாழ்க்கை முறையின் பாதுகாப்பு ஏற்பாடு மிக பலப்படுத்தப்பட்ட நிலையில் இறைவனால் ஆக்கப்பட்டது.

இறைத்தூதரே! நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம் என்று இவைன் கூறுகிறான் (அல் குர்ஆன் 34:28)

இந்நிலையில் உலக மக்களில் எவராக இருந்தாலும் அவர்கள் உண்மையில் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் இந்த தூதரை பின்பற்றுபவர்களாகத்தான் மாற வேண்டும்.

மக்களே நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்று தூதரே நீர் கூறும்.
                                 ...........
நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை பின்பற்றுங்கள் என்ற அறிவிப்பு மிக ஆழம் மிக்கதாகும்.

இறைவனை நேசிப்பதாக இருந்தால் நேராக இறைவனையே பின்பற்றி விட்டு போக முடியாதா... சத்தியமாக முடியாது. 'பின்பற்றுதல்' என்றால் ஒருவரை மாடலாக்கி அவர் செய்வது போன்று செய்வதாகும். அ.ஆ.. இ,ஈ என்று சொல்லி கொடுக்கும் ஆசிரியரின் ஓசையையும் உச்சரிப்பையும் அப்படியே திருப்பி சொல்லும் குழந்தைகளின் நிலையே பின்பற்றுவதற்குறிய நிலையாகும். இறைவனை பின்பற்றுவது என்பது - அதாவது அவனைப் போன்றே செயல்படுவது - எவராலும் (எவராலும் என்பதை எவ்வளவு வேண்டுமானாலும் அழுத்தி உச்சரித்துக் கொள்ளுங்கள்) ஒருக்காலமும் முடியாது காரியமாகும். எவராலும் முடியாத அந்த தன்மைகளில் தான் உண்மையான இறை சக்தியே அடங்கியுள்ளது.
அவனை நேசிப்பதற்குறிய அடையாளம் என்னவென்றால் அவன் ஏவியப்படி வாழ்ந்துக் காட்டுவதேயாகும். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் காட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவரே முஹம்மத் என்ற அந்த இறைத் தூதர் ஆவார்கள். அவர் வாழ்ந்துக் காட்டிய ஒவ்வொரு அங்குலத்திலும் இறை நேசத்திற்குறிய அடையாளங்கள் குவிந்துக் கிடப்பதால் உலகில் உள்ள எவரும் அவரைத்தான் தனக்கு மாடலாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலையை இறைவன் ஏற்படுத்தி இந்த அறிவிப்பையும் முன்னிருத்தி விட்டான்.

அவரை பின்பற்றி இறைவனை அறிதல்.

மனித வாழ்க்கையோடு பின்னி பிணைந்துப்போன இறை நம்பிக்கையில் தான் எத்துனை வேறுபாடுகள் - எத்துனை பாகுபாடுகள். கற்கால மனித சிந்தனையில் உதித்த மகா பயங்கரமான - மாயாஜாலமிக்க கடவுள் கொள்கையும், மனிதனாகவே கடவுளை வர்ணித்து - வடிவமைத்துக் கொண்ட மனித கடவுள் கொள்கையுமே நாத்திகம் உயிர் பெறுவதற்கான மூலக் கூறுகளை உருவாக்கி கொடுத்து விட்டது.

உண்மையான இறைவனை அறியும் வழியை முஹம்மத் என்ற அந்த இறைத்தூதரிடமிருந்துப் பெற்றால் அந்த பாடத்தில் கடுகின் முனை அளவிற்கு கூட பலவீனம் இருக்காது.

இறைவன் ஒருவன் - அவன் தனித்தவன் - பெறப்பட்டவனோ - பெற்றவனோ அல்ல - அவன் தேவையற்றவன் -  அவனுக்கு நிகராக எதுவுமில்லை -  எல்ல சத்கிகளையும் தன் அதிகாரத்திற்கு கீழ் வைத்துள்ளவன் அவன் - அவனோடு போட்டிப் போடக் கூடிய மாற்று சத்கி எதுவுமில்லை -  உறக்கம் - முதுமை - ஆசை - இச்சை - மறதி - மரணம் - என்ற எந்த கறையும் படியாதவன் அவன். எவரது கண்களுக்கும் - கருவிகளுக்கும் எட்டாத இடத்தில் இருந்துக் கொண்டு பிரபஞ்சம் அனைத்தையும் அவன் சூழ்ந்தறிந்து அவற்றை இயக்கிக் கொண்டிருக்கிறான். எந்த கண்களும் அவனை கண்டதில்லை. உலக வாழ்வில் எவரும் காண போவதுமில்லை. எந்த தவறை வேண்டுமானலும் செய்து விட்டு - சமூக கொடுமைகளில் சிறப்பாக பங்களித்து விட்டு - எப்படி வேண்டுமானலும் பொருளாதாரத்தை திரட்டி விட்டு - இறைவனுக்காக உண்டியலில் பணக் கட்டுகளையும் - தங்கத் தகடுகளையும் காணிக்கையாக்கி (இறைவனுக்கு லஞ்சம்) விட்டால் போதும் அவன் நம்மை ஆசிர்வதித்து விடுவான் என்ற சிந்தனை உங்களிடம் இருந்தால் நிச்சயம் நீங்கள் அழிவின் பாதையில் செல்கிறீர்கள் ஏனெனில் உண்மையான அந்த இறைவன் நீதி மிக்கவன். லஞ்சமோ, வாதாடுதலோ, பரிந்துப் பேசுதலோ அவனிடம் எடுபடவே படாது.  அப்படிப்பட்ட அந்த மகா சக்திக்கு கட்டுப்பட்டு வாழும் வாழ்க்கையே தூய்மையான வாழ்க்கை. இதுதான் முஹம்மத் என்ற அந்த இறைத்தூதர் மனிதகுலத்திற்கு வழங்கிய இறைக் கோட்பாடாகும். இந்த இறைக் கோட்பாட்டில்தான் உண்மையான இறை நேசம் அடங்கியுள்ளது. இப்போது அந்த வசனத்தைப் படியுங்கள்.

'மனிதர்களே நீங்கள் இறைவனை நேசிப்பதாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும்'
                                                            ........

நாம் இறைவனை நேசிக்கிறோம் இறைவன் நம்மை நேசிக்கிறானா...

இன்னும் ஆழமாக சிந்திக்க வேண்டிய அடுத்தக்கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். சிறந்த பலனை அடைவதற்காக ஒருவன் கடினமாக உழைக்கிறான். ஒருவன் மிகுந்த சிரத்தையுடன் படிக்கிறான் இந்த உழைப்பாலும் படிப்பாலும் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகி வாழ்வில் விரக்தியையும் தோல்வியையுமே சந்திப்பார்கள்.

தண்ணீர் என்பது மனித வாழ்க்கைக்கு எத்துனை அவசியமானது! 50 அடி தூரத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று தெரிந்து 'போரிங்' போட்டால் கிடைக்கும் தண்ணீரை கண்டு மனம் குதூகளிக்கிறது. சில இடங்களில் 200 அடி வரை பைப் இறக்கப்பட்டாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம் தண்ணீர் எங்கு இருக்கிறது என்ற அறிவு அவர்களுக்கு இல்லாததேயாகும்.
ஐம்பது அடியில் கிடைக்கும் சந்தோஷம் இருநூறு அடிகளை கடந்த  பிறகும் சிலருக்கு கிடைக்காமல் போவதை யோசித்துப் பார்த்தால் 'செயலுக்கு முன்னால் அதன் பலன் குறித்து சிந்திப்பது - ஆராய்வது' என்ற வழிக்காட்டுக் கொள்கை தெளிவாகும்.

போய் சேரக்கூடிய ஊரை மட்டும் ஒருவன் தெரிந்துக் கொண்டு அந்த ஊருக்கான வழியை தெரிந்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி விட்டு தன் பயணத்தை துவங்குகிறான் என்றால் இந்த பயணத்தின் முடிவு குறித்து யாராலும் தீர்வு சொல்ல முடியுமா...

உலகில் உள்ள அவ்வளவு ஆத்திகர்களுமே நாங்கள் இறைவனை அளவு கடந்து நேசிக்கிறோம் என்ற 'இறை நேச தேசத்திற்கு' தன் பணயத்தை துவங்கி விடுகிறார்கள். அதே சமயம் இறைவன் நம்மை நேசிக்கிறானா... என்ற அந்த வழியை - இறை நேச தேசத்தை அடையும் வழியை - அலட்சியப்படுத்தி விட்டுப் பயணிக்கிறார்கள். காற்றலையில் ஊர்கோலம் போகும் இவர்களின் இந்த ஆன்மீக தேடல் திக்குத் தெரியாமல் தான் அலைந்துக் கொண்டிருக்கும்.

தான் நேசிக்கும் - உயிரையே வைத்திருக்கும் அந்த பெண் தன்னை நேசிக்கிறாளா... அவள் மனதில் தனக்கு இடமுள்ளதா... இருவரும் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக வாழ அவள் தன்னை அங்கீகரிப்பாளா... என்ற முடிவோ - முயற்சியோ - தேடலோ இல்லாமல் போன காதல் ஒருதலை காதலாகவே சிதைந்துப் போகும். இந்த ஒருதலை காதலில் அவ்வப்போது மன ரீpதியாக சில சந்தோஷங்கள் ஏற்படலாம். அவள் நினைவுகளே போதும் என்ற வரட்டு வார்த்தை வெளிப்படலாம். ஆனால் காதலியை மனைவியாக்கி அவளோடு வாழும் காலங்களில் கிடைக்கும் 'அற்புதமான இன்பத்தை' இந்த ஒரு தலை காதலர்களால் அடைந்துக் கொள்ளவே முடியாது.

இறைவன் நம்மை நேசிக்கிறானா என்று தெரிந்துக் கொள்ளாமல் நாம் இறைவனை நேசிக்கும் அந்த ஆன்மீகம் 'ஒருதலை ஆன்மீகம'hகவே அமைந்து போகும்.

நாம்இறைவனை நேசிப்பது போன்று இறைவனும் நம்மை நேசிக்க வேண்டும் அதுதான் முழுமையான ஆன்மீகமாக இருக்கும். இறைவன் நம்மை நேசிக்கின்றானா ? தொடரும்

Thursday, April 7, 2011

பெண்கள் வேலைக்கு செல்லலாமா! பதில்கள் 31

*பெண்கள் வேலைக்கு செல்லலாமா
**கணவரை பெயர் சொல்லி அழைக்கலாமா
***ஓவியம் புகைப்படம் எடுக்கலாமா
****ஹிந்துவாகிய நான் காதலிக்கிறேன்
*****சுயஇன்பம் செய்வது தவறா
******திருவள்ளுவர் நபியா.

கேள்விகளுக்கு பதில் தொகுப்பு

359)கேள்வி- பெண்கள் வேலைக்குச் செல்வதை இஸ்லாம் அனுமதிக்கிறதா? yusuff_deen@

இதுபற்றி நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். இந்த நூற்றாண்டு பொருளாதார நூற்றாண்டாகவே கழியும். பொருளாதாரம் பற்றிய சிந்தனை அது பற்றிய பயம் மிகைத்து காணப்படும் காலத்தில் நாம் வாழ்கிறோம். பெண்கள் வீட்டோடு இருந்தால் போதும் என்று கடந்தக் காலத்தில் நினைத்தவர்கள் பேசியவர்கள் எல்லாம் இன்று தனது நிலையை மாற்றிக் கொண்டு குடும்பத்திற்கு உழைக்க எனது இரண்டு கைகள் மட்டும் போதாது குறைந்த பட்சம் மனைவியின் ஒரு கையாவது வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.

உழைப்பதற்கு ஆண்களும் செலவு செய்வதற்கு பெண்களும் என்பது கடந்த காலங்களில், விஞ்ஞான, கல்வி, பொருளாதார வளர்ச்சிப் பெறாத காலகட்டங்களில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். இன்றைய நிலையில் அது சாத்தியமில்லை என்பதை பெண்கள் வேலைக்கு செல்லலாமா..? போன்ற விவாதங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
வரவு எட்டணா, செலவு பத்தணா போன்ற கிண்டலான குத்தல் மொழிகள் ஒருகாலத்தில் வரவுக்கு மீறிய ஆடம்பர வாழ்க்கையை சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அதே வார்த்தை யதார்த்தத்தைச் சொல்கிறது.

என்னதான் பட்ஜட் போட்டு குடும்பத்தை நகர்த்த வேண்டும் என்று நினைத்தாலும் 'துண்டு' விழும் நிலை தவிர்க்க முடியாமலே போய்விடுகிறது. (நாம் இந்தியர்கள்!)

இந்நிலையில் கணவன் மட்டுமே உழைக்க வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த சுமையை எல்லா ஆண்களாலும் சுமக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.. எனவே பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனைவிகள் (தாங்களாக விரும்பி) உழைக்க முன் வந்தால் அதைத் தடுக்கும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை.

மனைவியை இறைவன் விளைநிலத்திற்கு ஒப்பாக்கியுள்ளான். (பார்க்க அல் குர்ஆன் 2:222) விளை நிலம் என்பதே ஒரு பொருளாதார குறியீடாகும். 'உங்கள் விளை நிலம்' என்று கணவர்களை நோக்கி சொல்லப்பட்டுள்ளதால் மனைவிகள் முறையான வழியில் உழைக்க விரும்பினால் கணவர்கள்் அனுமதிக்கலாம் என்பதை விளங்கலாம்.

பெண்கள் உழைக்க - வேலை செய்யத் தடையில்லை என்றாலும் வேலை, அது செய்யப்படும் இடம் இவற்றைப் பொருத்து இஸ்லாம் சில விதிகளை முன்வைக்கிறது.

எந்த ஆணுடனும் தனித்திருந்து வேலை செய்யக் கூடாது. உதாரணமாக 'செகரட்டரி' போன்ற பணிகள். இது போன்ற வேலைகள் அந்நிய ஆணுடன் (இது முதலாளியாகவோ அல்லது மேனேஜராகவோ அல்லது உயர் அதிகாரிகளாகவோ இருக்கலாம்) தனித்திருக்கும் பொழுதுகளை உருவாக்கி கொடுக்கும். ஆண் என்றைக்கும் ஆணாகத்தான் இருப்பான். சில்மிஷ பேச்சுகள், ஏடாகூடமான பார்வைகள் என்பதிலிருந்து எந்த ஆண்களையும் விதிவிலக்காக காட்ட முடியாது. பார்வை - பேச்சு என்று துவங்கி பெண்மையை கறைப்படுத்தும் சந்தர்பத்தை அவசியம் உருவாக்கி விடும். (இது போன்ற வேலைகளுக்கு பெண்களை நாடும் எவரும் தங்கள் மனைவிகளையோ தங்கள் சகோதரிகளையோ தேர்ந்தெடுப்பதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்)

ஆணுடன் தனிமையில் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கும் எந்த வேலையையும் (அது என்னதான் பொருளாதாரத்தை கொட்டிக் கொடுக்கக் கூடிய வேலையாக இருந்தாலும் சரி) அந்த வேலையை எந்த பெண்ணும் ஒப்புக் கொள்ளவேக் கூடாது. இதை இஸ்லாம் இப்படி எச்சரிக்கிறது:

"அந்நிய ஆணும் - பெண்ணும் தனித்திருக்கும் போது (அவ்விருவருக்கும் பொது எதிரியான) ஷைத்தான் மூன்றாவதாக இருக்கிறான் என்பது நபிமொழி. (திர்மிதி)

ஆணுடன் தனிமையில் இருப்பதை தவிர்த்து பொதுவான வேலைகளை பெண்கள் தேர்ந்தெடுக்கலாம். மருத்துவப் பணி, ஆசிரியைப் பணி, ஓவியப்பணி, விவசாயம், தையற்கலை, விமானப் பணிப்பெண்கள், விற்பனையாளர்கள் போன்ற வேலைகளில் தங்களுக்குத் தகுதியானவற்றை பெண்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பொதுவான எந்த வேலையைத் தேர்ந்தெடுத்தாலும் அந்த வேலையில் பிற ஆண்களை சந்திக்கும் சூழ்நிலை இருந்தால் தாங்கள் அணியும் உடைகளில் பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சேலையும் அது சார்ந்தவையும் கவர்ச்சிகரமான உடை என்பதால் அவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். சுடிதார் - கமீஸ் போன்ற உடலை முழுவதும் மறைக்கும் உடையணிந்து தலைமுந்தானையுடன் வேலை செய்யலாம். சேலை உடுத்த வேண்டி வந்தால் மேலதிகமாக புர்கா அவசியமாகி விடும்.

பெண்கள் வெளியில் சென்று பொருளாதாரத்தைத் திரட்டுவதை இஸ்லாம் அவர்கள் மீது கடமையாக்கவில்லை. இதற்கு காரணம் 'பெண் அதற்கு தகுதியானவளல்ல என்று இஸ்லாம் நினைப்பதாக சிலர் விளங்கிக் கொண்டு இஸ்லாத்தின் பெண்ணுரிமையை விமர்சிகக்கத் துவங்கி விடுகிறார்கள்.' இது மனித இயல்பை உணராத அவசரக்காரர்களின் முடிவாகும்.

பெண் இயல்பிலேயே குடும்பப் பணிகளை செய்ய வேண்டிய பொறுப்பைப் பெற்றுள்ளாள். பலர் பணியாற்றும் ஒரு ஆபிஸுக்கு நிகரானப் பணிகள் ஒவ்வொரு நாளும் குடும்பத்தில் நடக்கின்றன. இதில் பெரும் பங்காற்றுவது அந்த குடும்பப் பெண்கள் தான். காலையில் எழுந்து அடுப்பங்கரையில் துவங்கும் வேலை கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து இரவு பத்து மணிவரை நீடிக்கின்றன. குழந்தைகள் சிறப்பாக உருவாகும் இடம் இதுதான். சுகாதாரமான உணவு, தூய்மையான உடை என்று ஆரோக்யமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது குடும்பம் தான். இவற்றை செய்து முடிக்க தகுதியுள்ளவர்கள் குடும்பப் பெண்கள் தான். இதற்காக அவர்கள் தினமும் ஒதுக்க வேண்டிய நேரம் அதிகமானதாகும். இத்துனைப் பொறுப்புணர்வுகளும் தட்டிக் கழிக்க முடியாத பணிகளும் நிறைந்த பெண்களை வேலைக்கு அனுப்புவதென்பது அவர்கள் தலையில் கூடுதல் சுமையை ஏற்றி வைக்கும் முயற்சியாகும்.

ஆபிஸில் அல்லது மற்ற வேலைகளை செய்யும் எந்த ஆணும் குடும்பத்திற்கென்று எந்த வேலையும் செய்வதில்லை. (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) வேலை முடித்து வீடு திரும்பும் ஆணுக்கு அவன் எதிர்பார்ப்பவை (உடனடியாக சிலருக்கு டீ தேவைப்படும், சிலர் உடனடியாக சாப்பிடும் எண்ணத்தில் வருவார்கள், சிலர் வெண்ணீரில் குளிக்க வேண்டும் என்று வருவார்கள்.இப்படி பல அவசரங்களில் வீடு நுழையும் ஆண்களே அதிகம்) கிடைக்கவில்லை என்றால் எரிச்சலடையக் கூடிய, கோபப்படக் கூடிய மனநிலையைப் பெறுவார்கள். அதே நேரம் வெளியில் வேலை செய்து விட்டு வீடு திரும்பும் பெண்களின் நிலை என்ன? அவர்களால் யார் மீதும் கோபப்பட முடியாது. அவசர, அவசரமாக குடும்ப வேலையில் இறங்க வேண்டும்.

ஆணோடு ஒப்பிடும் போது பெண் உடல் ரீதியாக பலவீனமானவள். குடும்பத்தை பராமரிக்கும் அளவிற்கே உடல் பலத்தையும் மனநிலையையும் பெற்றிருக்கும் பெண்களை "வேலைக்குப் போ"  என்று வற்புறுத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இத்தகைய நிலைக்கு தள்ளப்படும் பெண்கள் வெகு விரைவில் மன அழுத்தத்தையும் உடல் பலவீனத்தையும் பெற்று விடுகிறார்கள்.

மட்டுமின்றி இதையும் கடந்து வக்கிரபுத்தியுள்ள ஆண்களால் அவர்கள் அவதிப்படுவதாகும். பாலியல் பார்வை - பேச்சு - சீண்டல் என்று மன நோயாளிகளிடம் அவர்கள் தினம் தினம் படும் அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. இத்துனையும் சகித்துக் கொண்டே அவள் வருமானத்தை பெறமுடியும். அதுவும் ஆண் பெறும் வருமானத்தை விட வெகு குறைவாக.
பெண்களில் உடல் மற்றும் மனநிலை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 'அவர்களால் சுயமாக எந்த வருமானத்தையும் ஈட்டவே முடியாதா..? என்ற கேள்வி இங்கு பிறக்கின்றது.

நிச்சயமாக ஈட்ட முடியும்.

பிறரிடம் சம்பளத்திற்கு வேலை செய்வதை விட தாமே சுய தொழில் தொடங்குவதுதான் பெண்களைப் பொருத்தவரை சரியாகும்.

வீடுகளில் துவங்கப்படும் சிறு தொழில்கள், பெண்களாக ஒன்று கூடி செய்யக் கூடிய பல்வேறு தொழில்கள் என்று சுய தொழில்களில் பெண்கள் ஆர்வம் காட்டும் போது பல சிக்கல்களை அவர்களால் தவிர்த்து விட முடியும். சுய தொழிலால் முன்னுக்கு வந்த, வந்துக் கொண்டிருக்கின்ற சாதனைப் பெண்கள் தமிழக்கத்தில் மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு அதே வழியில் பெண்கள் சம்பாதிக்க முயலலாம்.

சம்பாதிப்பதற்காக எந்த வழியை ஒரு முஸ்லிம் பெண் தேர்ந்தெடுத்தாலும் அது அவளது குடும்ப பொறுப்பை தட்டிக் கழிப்பதாக மட்டும் அமைந்து விடக் கூடாது. குழந்தையை சீரிய முறையில் உருவாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து விடுபட எந்த முஸ்லிம் பெண்ணுக்கும் அனுமதியில்லை என்பதை மட்டும் எந்த ஆணும் மறந்து விடக் கூடாது.
-------------------------
360) கேள்வி - மனைவி கணவரை பெயர் கூறி அழைக்கலாமா? இந்தியா போன்ற நாடுகளில் பெண்கள், கணவன்மார்களை மரியாதை நிமித்தம் நேரடியாக பெயர் சொல்லாமல் வேறு வகைகளில் அழைக்கின்றனர். அரபு பெண்கள் பெயர் சொல்லி அழைக்கின்றனர். நமது மார்க்கப்படி விளக்கவும். fatha@

கணவன் மனைவி இருவருக்கு மத்தியில் உள்ள தொடர்பு வெறும் உடல் ரீதியானது மட்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. அதற்கு மேலாக உள்ளத்தோடு தொடர்பு கொண்டவையாகும்.

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்காக உங்கள் மனைவியை உங்களிலிருந்தே படைத்தான்... (அல்-குர்ஆன். : 30 : 21)

கணவன் மனைவிக்குள் ஆறுதல் கிடைக்கும் எல்லா விஷயங்களையும் இந்த வசனம் அனுமதிக்கிறது. சொற்கள், செயல்கள், விளையாட்டு இவை கணவன் மனைவிக்குள் ஆறுதலையும் நெருக்கத்தையும் கொடுக்கும். மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ஒரு மனைவி தன் கணவனை பெயர் சொல்லியும் அழைக்கலாம். இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கருதினால் இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் எப்படி அழைத்துக் கொள்வார்களோ அது போன்று கூட அழைத்துக் கொள்ளலாம். செல்லமாகவும் கூறலாம். இஸ்லாம் இதையும் தடுக்கவில்லை.

மனைவி மீது கணவனுக்கு இருக்கும் உரிமைப்போன்று மனைவிக்கும் உரிமை இருக்கிறது என்று கூறுகிறது இஸ்லாம். (பார்க்க, அல் குர்ஆன்: 2 : 228)

பெயர் சொல்லி அழைக்கும் உரிமை உட்பட எல்லா உரிமைகளும் இதில் அடங்கும்.

ஆயிஷாவே! நீ என்மீது சந்தோஷமாக இருக்கிறாயா..? அல்லது கோபமாக இருக்கிறாயா..? என்பதை நான் சாதாரணமாக அறிந்துக் கொள்வேன் என நபி(ஸல்) கூறினார்கள். எப்படி? என்று ஆயிஷா(ரலி) கேட்க, 'முஹம்மத் உடைய இறைவன்மீது சத்தியமாக' என்று நீ கூறினால், சந்தோஷமான இதயத்துடன் நீ இருக்கிறாய் என்பதை உணர்வேன். 'இப்ராஹீம் உடைய இறைவன் மீது சத்தியமாக' என்று நீ கூறினால் உன் உள்ளம் கோபத்தில் இருக்கிறது என்பதையும் நான் அறிவேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆய்ஷா(ரலி), புகாரி, முஸ்லிம்)

தம் கணவரை 'முஹம்மத்' என்ற பெயரால் அழைப்பதை நபி(ஸல்) சந்தோஷத்தோடு அனுமதிக்கிறார்கள். எனவே கணவனின் பெயரை மனைவி தாராளமாகச் சொல்லலாம். இன்று கூட அரபு நாடு செல்பவர்கள் சாதாரணமாக இந்நிலையை காண்பார்கள்.

பெயர் சொல்லக்கூடாது என்ற மரபு அந்நிய சமயத்தின் காப்பியடிப்பாகும்.
'இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்' என்பது நபிமொழி(புகாரி)

இந்த நபிமொழியையும் கருத்தில் கொண்டால் மனைவி தம் கணவனின் பெயர் சொல்லி அழைப்பது மிகவும் நியாயமானதே என்பதை விளங்கலாம்.
----------------------
361) கேள்வி - அல்லாஹ் உங்களது இந்த அரும்பணிக்கு அருளட்டும். நானும் எனது கணவரும் இந்த இணையதளத்தை ரொம்பவும் விரும்பி பார்க்கிறோம். மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தரட்டும்.

இஸ்லாத்தில் உருவ படங்களை வரைவது தடுக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். ஆனால் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு இதை ஒரு பாடமாக வைத்து அவர்களை வரையும் கலையில் ஊக்குவிக்கின்றனர். இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?qren@

பொதுவாக எல்லா உருவங்களும் தடுக்கப்பட்டவையல்ல. இது பற்றி தனிக் கட்டுரை 'சட்டங்கள்' பகுதியில் இடம் பெற்றுள்ளது. பார்க்கவும்.
'ஓவியங்கள் - புகைப்படங்கள் கூடுமா?'  இதே வலைப்பதிவில் விளக்கம் கிடைக்கும்
--------------------
362) கேள்வி -நான் இந்து மதத்தை சேர்ந்தவன் 5 வருடங்களாக ஓர் இஸ்லாமியப் பெண்ணை உயிருக்குயிராக காதலித்து வருகின்றேன். அதன் பின் இஸ்லாம் மதத்தை பற்றி நன்றாக அறிந்து கொண்டேன். கடந்த ஒரு வருடத்துக்கு முன் நான் முஸ்லிம் டொக்டர் ஒருவரிடம் சென்று கத்னா எனப்படும் சுன்னத் செய்து கொண்டேன். சுன்னத் செய்த பின்பு கடந்த ஒரு மாதத்துக்கு முன் நான் காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்டேன். உணர்ச்சி வசப்பட்டே இதில் இணைந்தேன். இது மனித இயல்பே இது தவறா? தற்போது நான் புனித இஸ்லாத்தை ஏற்று எல்லோர் சம்மதத்துடனும் மணமுடிக்க உள்ளேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? பெண் வீட்டில் இஸ்லாத்தில் இணைந்தால் என்னை ஏற்றுக் கொள்வதாக சொல்கிறார்கள். எனக்கும் இஸ்லாத்தை தழுவ ஆசை. நான் இனி எப்படி பள்ளி செல்லவேண்டும்? பள்ளியில் எப்படி தொழவேண்டும்? தொழுவதற்குரிய துஆ எது? எப்படி மனனம் செய்ய வேண்டும்? இனி பின்பற்ற வேண்டிய முறை என்ன? இந்த எல்லா கேள்விக்குமான பதிலை உடன் தரவும். lanko@

மனித உள்ளங்களையும் அதில் உலவும் எண்ணங்களையும் அறிந்தவனாக இறைவன் இருக்கிறான். இஸ்லாத்தை தழுவுவதற்கென்று எந்த சடங்கும் இல்லை. 'வணக்கத்திற்குரியவன் ஏக இறைவனான ஒருவனைத் தவிர வேறெதுவும் இல்லை' என்ற நம்பிக்கையும் 'முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருக்கிறார்கள்' என்ற நம்பிக்கையும் எவரது உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டதோ அவர் இஸ்லாமிய வட்டத்திற்குள் வந்து விடுவார். இதை யார் முன்னிலையிலாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால் குளித்து விட்டு ஊர் ஜமாஅத் முன்னிலையில் கூறலாம். வேறு எந்த சடங்கும் இதற்கென்று இல்லை. மதகுருக்கள் (ஹஜ்ரத்துகள்) முன்னிலையில் தான் இதை சொல்ல வேண்டும் அல்லது அவர்கள் தான் மேற்கண்ட இஸ்லாத்தை ஏற்பதற்கான உறுதி மொழியை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. இன்றைய சூழ்நிலையில் இஸ்லாத்தை ஏற்றால் அதை அவசியம் அரசு ஆவனங்களில் பதிந்து விடுவது நல்லது. இஸ்லாத்தை தழுவும் ஒருவர் தனக்கு விருப்பமான பெயரை தேர்ந்தெடுத்து அதை பதிவு செய்துக் கொள்ளலாம்.

பள்ளிக்கு செல்வதென்பது ஒரு சாதாரண காரியம். இஸ்லாத்தை தழுவாதோரும் கூட பள்ளிவாசலுக்கு சென்று வரலாம். உங்களை சுற்றியுள்ள முஸ்லிம்களிடம் எப்படி தொழ வேண்டும் என்பது பற்றியும் இதர உங்கள் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு உங்கள் காதல் தான் காரணம் என்றால் அது உண்மையான இஸ்லாமிய பற்றாக இருக்க முடியாது. இஸ்லாத்தை ஏற்பதற்கான சரியான காரணம் எதுவாக இருக்க வேண்டும் என்றால் 'இதர எல்லா கொள்கை கோட்பாடுகளையும் விட இஸ்லாத்தின் கொள்கையும் கோட்பாடுகளும் சட்டங்களுமே சிறந்தது என்பதை அறிவுப்பூர்வமாக விளங்கி இணைவதுதான் உண்மையான மனமாற்றமாக இருக்க முடியும். ஒரு பெண்ணுக்காகக் கொள்கையை மாற்றிக் கொள்வது என்பது வெறும் காதல் மயக்கமாகத்தான் இருக்க முடியும். இது எந்த அளவிற்கு நிலைப் பெறும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.

திருமணத்திற்கு முன் உறவுக் கொண்டு விட்டு 'இது மனித இயல்புதானே' என்று நியாயப்படுத்தியுள்ளீர்கள். கேட்கிறோம் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் "ஒரு காமுகன் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் தனது பாலியல் பசியை தீர்த்துக் கொண்டு 'இது மனித இயல்புதானே!" என்று வாதிட்டால் அதை உங்களால் சரிகாண முடியுமா..? காமஇச்சைக் கோட்பாட்டிற்கு காதல் என்ற பெயர் கொடுத்து நிறைய இளைஞர்கள் தங்கள் காரியங்களை முடித்துக் கொள்கிறார்கள். பாவப்பட்ட பெண்ணிணத்திற்கு என்ன பட்டாலும் புத்தி வருவதில்லை.

காதல் என்ற பெயரில் திருமணத்திற்கு முன் விபச்சார கூத்தடிக்க நினைக்கும் முஸ்லிம் பெண்களை எச்சரிக்கிறோம். மரணித்துப் போனவர் எப்படி மீண்டு வரமுடியாது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மையோ அதே அளவு உண்மை பெண் தவறான வழியில் தன்னை இழப்பதுமாகும். என்னதான் அழுது புரண்டாலும் அந்நிய ஆண் தொட்ட உடலும், அதனால் ஏற்பட்ட உளரீதியான காயங்களும் மறைந்து விடாது. இழந்தது திரும்பி வராது. எச்சரிக்கை! எச்சரிக்கை!!
----------------------
363) கேள்வி - சுயஇன்பம் இஸ்லாத்தில் தடைச்செய்யப்பட்டுள்ளதா? ஆம் எனில், 20 வருடங்களாக இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்ட ஒருவருக்கு இதில் இருந்து விடுபட சிறந்த வழி என்ன? மார்க்க ஆதாரங்களுடன் பதிலளிக்கவும் zliabd@

364) கேள்வி - நான் 24 வயது இளைஞன். மார்க்கத்தை முழுமையாக பின்பற்ற விரும்புகிறேன். ஆனால் என்னுடைய வயதின் காரணமாக இது முடியவில்லை. அடிக்கடி செக்ஸ் சிந்தனைகள் என்னை அலைக்கழிக்கின்றன. சில நேரங்களில் சுயஇன்பத்திலும் ஈடுபடுகிறேன். நான் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறேன். சுயஇன்பம் மிகவும் பாவமானச் செயலா? எனக்கு தயவுசெய்து விளக்கவும். இது பாரதூரமான தவறென்றால் நான் உடனே நிறுத்த வேண்டுமல்லவா? ad_rafi@

இக்கட்டான சில நேரங்களில் சுயஇன்பம் கூடும் என்றும், அது அறவே கூடாது என்றும் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் இரு கருத்தோட்டங்கள் நிலவுகின்றன. எது எப்படி இருந்தாலும் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவதே நல்லதாகும்.

இது பற்றி ஒரு மருத்துவரிடம் கலந்ததில் அவர் கொடுத்த தகவல்கள்:

1) அந்த பழக்கத்திற்கு ஆளானவர்கள் தொடர்ச்சியாக அதில் ஈடுபடும் மனநிலையைப் பெறுவார்கள். நாளடைவில் மனம் அதை விரும்பினாலும் உடல் விரும்பாத நிலை உருவாகும். அத்தகைய சந்தர்ப்பங்களில் மனதிற்கு கட்டுப்பட்டு அந்த காரியத்தில் ஈடுபடும் நிலைத் தொடரும். உடலின் உள் உறுப்புகள் இதற்கு ஈடுகொடுக்க முடியாமல் தன் சக்தியை அதிகரிக்க துவங்கி பின்னர் உடலின் இதர பாகங்களிலிருந்து சக்தியை உறிஞ்சி எடுக்கத் துவங்கும். இதனால் உற்பத்தி நாளங்களில் கோளாறு தலைக்காட்டத் துவங்கும்.

2)இடுப்புப்பகுதியில் பலவீனம் தெரியும். பாத எரிச்சல், ஆண்குறியில் எரிச்சல் என்று அந்த அறிகுறிகள் வெளிப்படும். உடல் பலவீனத்தை விட பிறகு மனநோய் தாக்கும். எதிலும் நாட்டமில்லாத நிலை உருவாகும்

3)தொடர்ச்சியாக சுய இன்பத்தில் ஈடபடுபவர்களுக்கு மனைவியுடன் கூடும் இல்லறத்தில் நாட்டம் குறைந்து விடும் என்றெல்லாம் அந்த மருத்துவர் அடுக்கிக் கொண்டேச் சென்றார்.

விடுபடும் வழி என்ன?

தனிமை அவசியம் தவிர்க்கப்பட வேண்டும். பாலியலைத் தூண்டக் கூடிய எதுவொன்றிலும் கவனம் செலுத்தக்கூடாது. பெண்களை மோசமாக சித்தரித்து கமெண்ட்ஸ் அடிக்கும் நண்பர்கள் வட்டம் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். தான் ஓர் உறுதியும், ஆரோக்யமும் உள்ள ஆண் மகனாக சமூகத்திலும் மனைவியிடமும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக பதித்துக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனுடன் அதிக தொடர்பையும் - மார்க்க சமூக அக்கறையுள்ள அவைப் பற்றி பேசி விவாதிக்கக் கூடிய நண்பர்களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் இருக்கக் கூடிய நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

'இறைவனை நினைவுக் கூறும் உள்ளங்கள் அமைதிப் பெறுகின்றன' என்று குர்ஆன் கூறுகிறது. அவனிடம் சரணடைந்தால் அனைத்துத் தொல்லைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
--------------------------
365) கேள்வி - திருவள்ளுவர் பற்றி உங்கள் கருத்தென்ன? நம் தமிழ் மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் திருவள்ளுவர் நிறைய நல்ல கருத்துக்களை சொல்லி சென்றுள்ளார் என்று பெருமையாக பேசுகிறார்கள். அவரைப் பற்றி எனக்கு எந்த விபரமும் தெரியவில்லை. உங்கள் கருத்தை சொல்லுங்களேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்களின் உயர்வை எப்படிச் சொல்லி புரிய வைக்க வேண்டும்? naayub@

'சொல்லுதல் யாருக்கும் எளியவாம் அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்' என்கிறார் திருவள்ளுவர். ஒருவரை முன்னுதாரணமாகக் கொள்வதற்குரிய மதிப்பீடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான அளவுகோல் இதுவாகும்.

ஒன்றை சுவைப்பட சொல்வது, தத்துவார்த்த முறையில் சொல்வது, மயக்கும் விதத்தில் சொல்வது, பெரிய காரியமல்ல. இன்றைய உலக அரசியல்வாதிகள், போலி ஆன்மிகவாதிகள் சொல்லி.. சொல்லி.. சொல்லி...சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் சொன்னபடி வாழ்கிறார்களா..? இல்லை.

எழுத்தாளர்கள் - பத்திரிக்கையாளர்கள் - பேச்சாளர்கள் உட்பட வெளியுலகில் பரிச்சயமானவர்கள் அனைவருமே 'என்னைப் பார்க்காதே என் கருத்தைப் பார்" என்ற வெட்கங்கெட்ட வார்த்தையையே தாரக மந்திரமாக மொழிந்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் நிவர்த்தி செய்ய முடியாத மிக நீண்ட இடைவெளி மனிதர்களிடம் மண்டி கிடைப்பதை பார்க்கிறோம். 'சொல்லுதல் எளிதுதான் சொல்லியவண்ணம் வாழ்வதுதான் கடினம்'.

உபதேசம் செய்பவரைப் பற்றிக் கவலையில்லை. உபதேசங்களே வாழ்க்கைக்கு முக்கியம் என்று நினைத்தால் கோடான கோடி உபதேசிகள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவராக அல்லது அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவராகத்தான் திருவள்ளுவர் இருப்பார்.

அவர் வாழ்ந்த காலகட்டத்தை கருத்தில் எடுத்துக் கொண்டால் திருவள்ளுவர் ஒரு மிக சிறந்த அறிவாளி என்பதில் மாற்றுக் கருத்துக் கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. ஆனால் ஒருவருடைய அறிவு மட்டுமே அவர் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு சான்றல்ல. எனவே திருவள்ளுவரிடமிருந்து நல்ல உபதேசங்களை எடுத்துக் கொள்ளலாமே தவிர அவரை வாழ்க்கைக்கு முன்னுதாரனமாக்கிக் கொள்ள முடியாது. காரணம் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பது யாருக்குமே தெரியாது.

சொன்னது எதுவோ அதுவே எனது வாழ்க்கை என்று சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் கடுகளவும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்துக் காட்டிய ஒரே மாமனிதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் தான்.

அதனால் தான் அவர்களால் 'என் வார்த்தைகளை பின்பற்றுங்கள் என்று உபதேசிக்காமல் என்னை முழுவதுமாக பின்பற்றுங்கள்" என்று துணிச்சலாக சொல்ல முடிந்தது.  வார்த்தையும் - வாழ்க்கையும் ஒன்றாகி போனவர்களால் மட்டுமே மனித குலத்தை கொடுமையிலிருந்து மீட்டெடுக்க முடியும். அதில் என்றென்றைக்கும் முதலிடம் வகிப்பவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டும் தான்.

அவர்களின் வாழ்க்கையை விளக்கி ஏராளமான வரலாற்று நூல்கள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் மிகச் சிறந்த வரலாற்று ஆவணத் தொகுப்பு சகோதரர் பீ.ஜே அவர்கள் 'அல்-ஜன்னத்' மாத இதழிலும் பின்னர் 'ஒற்றுமை' இதழிலும் தொகுத்து எழுதிய 'மாமனிதர்' என்ற தொகுப்பாகும். புகாரி - முஸ்லிம் போன்ற வரலாற்று நூல்களிலிருந்து வாழ்க்கை சம்பவங்களை எடுத்து அவற்றை தற்கால உலக சூழலுடன் ஒப்பிட்டு விளக்கியுள்ளார். அந்த மாமனிதர் (ஸல்) அவர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் சிறந்த தொகுப்பாகும் இது.

அதேப் போன்று IFT நிறுவனம் மொழிப்பெயர்த்து வெளியிட்டுள்ள 'அண்ணல் நபியின் அழகிய வரலாறு' என்ற நூலைக் குறிப்பிடலாம். மிக எளிய நடையில் அவர்களின் வரலாறு எவ்வித குறைவும் இன்றி தொகுக்கப்பட்டுள்ளது. இது போன்ற நூல்களை எங்களால் பரிந்துரைக்க முடியும். இவைகளை வாங்கி பிறருக்கு கொடுத்து படிக்க வைத்தால் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களைப் பற்றிய நல்ல அறிமுகம் கிடைக்கும்.
--------------------------
366) கேள்வி -  ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரம் பற்றி விளக்கும் நூல்கள் தமிழில் உள்ளனவா? heart092@

ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தரத்தை அலசும் நூல்கள் அரபியில் ஏராளமாக இருக்கின்றன. ஒரு குழுத் தொடர்ச்சியாக மொழிப்பெயர்த்தாலும் அந்த பணி முடிய குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும். அது ஒரு விரிவான வசீகரத் தன்மையை உள்ளடக்கிய கலையாகும்.

தமிழில் அத்தகைய நூல்கள் எதுவும் இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இப்படியும் அப்படியுமாக எதிர்காலத்தில் சில நூல்கள் வெளிவந்தாலும் அதனால் எந்த பிரயோஜனமும் ஏற்படாது என்பதே உண்மையாகும். ஹதீஸ் அறிவிப்பாளர்களை அலச வேண்டுமானால் குறைந்த  பட்சம் 'தஹ்தீபுத் தஹ்தீபு் 'தஹ்தீபுத் தர்கீப்' 'மீஸான்' போன்ற நூட்களாவது முழுமையாக வெளிவர வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது

இறைத் தூதுத்துவர் - பகுதி 1

Wednesday, April 6, 2011

தபூக் போர் - கஅப்(ரலி)

கஅப் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள்: (இவர்தான் கஅப் (ரலி)அவர்கள் கண்பார்வை இழந்த காலத்தில் அவர்களை வழிநடத்தி அழைத்துச் செல்பவராக இருந்தார்.) கஅப் (ரலி) அவர்கள் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் நபியவர்களை விட்டும் பின்தங்கிவிட்டபொழுது நடந்த நிகழ்ச்சி பற்றி இவ்வாறு அறிவித்ததை நான் கேட்டுள்ளேன்.

கஅப்(ரலி)அவர்கள் சொன்னார்கள்: நபி(ஸல்)அவர்கள் கலந்துகொண்ட எந்த யுத்தத்தை விட்டும் நான் எப்போதும் பின்தங்கியதில்லை., தபூக் யுத்தத்தைத்தவிர! ஆனால் பத்று யுத்தத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்! அதில் கலந்துகொள்ளாமல் இருந்த எவரும் கண்டிக்கப்படவில்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் - குறைஷிகளின் வாணிபக் குழுவைத் தாக்குவதற்காகத்தான் புறப்பட்டிருந்தார்கள். அங்கே முன்னறிவிப்பு இல்லாமல் அவர்களையும் அவர்களுடைய பகைவர்களையும் மோதச் செய்தான், அல்லாஹ்!
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக நாங்கள் உறுதிமொழி கொடுத்த போது நடைபெற்ற நள்ளிரவு கணவாய் உடன்படிக்கையில் நபி (ஸல்) அவர்களிடம் நான் ஆஜராகியுள்ளேன். அதற்குப் பகரமாக பதருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப்பெறுவதை நான் விரும்பவில்லை. அதையவிட பத்ருப் போர்தான் மக்களிடையே அதிகம் பேசப்படக்கூடியதாக இருந்தாலும் சரியே!

كَا نَ مِنْ خَبَرِيْ حِيْنَ تَخَلَّفْتُ عَنْ رَّسُوْلِ اللهِ فِيْ غَزْوَةِ تَبُوْكٍ أنِّيْ لَمْ أكُنْ قَطُّ أقْوَي وَ لاَأيْسَرَ مِنَّيْ حِيْنَ تَخَلَّفْتُ عَنْهُ فِيْ تِلْكَ الْغَزْوَةِ , وَاللهِ مَا جَمَعْتُ رَاحِلَتَيْنِ قَطٌّ حَتَّي جَمَعْتُهَ فِيْ فِيْ غَزْوَةِ تَبُوْكٍ أنِّيْ لَمْ أكُنْ قَطُّ أقْوَي وَ لاَأيْسَرَ مِنَّيْ حِيْنَ تَخَلَّفْتُ عَنْهُ فِيْ تِلْكَ الْغَزْوَةِ , وَاللهِ مَا جَمَعْتُ رَاحِلَتَيْنِ قَطٌّ حَتَّي جَمَعْتُهَ فِيْ فِيْ غَزْوَةِ تَبُوْكٍ أنِّيْ لَمْ أكُنْ قَطُّ أقْوَي وَ لاَأيْسَرَ مِنَّيْ حِيْنَ تَخَلَّفْتُ عَنْهُ فِيْ تِلْكَ الْغَزْوَةِ , وَاللهِ مَا جَمَعْتُ رَاحِلَتَيْنِ قَطٌّ حَتَّي جَمَعْتُهَ فِيْ تِلْكَ الْغَزْوَةِ , وَلَمْ يَكُنْ رَسُوْلُ اللهِ يُرِيْدُ غَزْوَةً اِلاَّ وَرَّي بِغَيْرِهَا حَتَّي تِلْكَ الْغَزْوَةِ, فَغَزَاهَا رَسٌوْلُ اللهِ فِيْ حَرٍّ شّدِيْدٍ, وَاسْتَقْبَلَ سَفَرًا بَعِيْدًاوَ مَفَازًا, وِاسْتَقْبَلَ عَدَدًا كَثِيْرًا , فَجَلَّي للمُسْلِمِيْنَ أمْرَهُمْ لِيَتَأهَّبُوْا اُهْبَةَ غَزْوِهِمْ فَأخْرَهُمْ بِوَجْهِهِمُ الَّذِيْ يُرِيْدُ, وَ الْمُسْلِمُوْنَ مَعَ رَسُوْلِ اللهِ كَثِيْرٌ وَ لاَ يَجْمَعُهُمْ كِتَابٌ حَافِظٌ (يُرِيْدُ بِذَلِكَ الدِّوَانَ) قَالَ كَعْبٌ : فَقَلَّ رَجُلٌ يُرِيْدُ أنْ يَتَغَيَّبَ اِلاَّ ظَنَّ أنَّ ذَلِكَ سَيَخْفَي بِهِ مَا لَمْ يَنْزِلْ وَحْيٌ مِنَ اللهِ, وَغَزَا رَسُوْلُ اللهِ تِلْكَ الْغَزْوَةَ حِيْنَ طَابَتْ الثِّمَارُ وَ الظِّلاَلُ فَأنَااِلَيْهَا أصْعَرُ

நான் அதிக அளவு சக்தியும் சௌகரியுமும் முன்னெப்போதும் பெற்றிருந்ததில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அதற்கு முன்பு ஒருபொழுதும் இரண்டு ஒட்டகங்கள் என்னிடம் இருந்ததில்லை! ஆனால் அந்தப் போரின்போது இரண்டு ஒட்டகங்களை நான் சேகரித்து வைத்திருந்தேன்.

நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட நாடினால் அதனைச் சாடைமாடையாக- மறைத்தே பேசுவார்கள். இவ்வாறு இந்தப் போரும் வந்தது! நபியவர்கள் இந்தப் போருக்காகப் புறப்பட்டது கடுமையான வெயில்நேரத்தில்! அதுவும் நெடியதொரு பயணத்தை மேற்கொண்டார்கள். பாலைவெளியைக் கடந்து செல்ல நேர்ந்தது! எதிரிகளின் அதிக எணண்ணிக்கை கொண்ட படையைச் சந்திக்கநேர்ந்தது! எனவே முஸ்லிம்கள் தங்களுடைய போர்தடவாடங்களைத் தயார் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக யதார்த்த நிலையை அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறினார்கள். முஸ்லிம்கள் எங்கு நோக்கிச் செல்லவேண்டுமென்பது தமது நாட்டம் என்பதை வெளிப்படையாக அறிவித்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் முஸ்லிம்கள் அதிக அளவில் புறப்பட்டிருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை எந்த ஏட்டிலும் பதிவு செய்துவைக்கப்படவில்லை. (அதாவது அரசாங்கப் பதிவேடு என்று எதுவும் அப்பொழுது இல்லை)

கஅப் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: போருக்குப் புறப்படாமல் தங்கிவிடலாமென  விரும்பும் எவரேனும் இருந்தால் நாம் கலந்து கொள்ளாதது பற்றி அல்லாஹ்விடம் இருந்து வஹி (குர்ஆன் வசனம்) இறங்கினாலே தவிர அது யாருக்கும் தெரியப் போவதில்லை - என்றே எண்ணிக் கொண்டிருந்தார்!

நபி (ஸல்) அவர்கள் இந்தப் போருக்காகப் புறப்பட்ட நேரத்தில் கனிகள் கனிந்திருந்தன., நிழல்கள் நன்கு அடர்த்தியாகி விட்டிருந்தன! நான் அவற்றின் மேல் அதிக மையல் கொண்டிருந்தேன்!

فَتَجَهَّزَ رَسُوْلُ اللهِ وَالْمُسْلِمُوْنَ مَعَهُ , وَطَفِقْتُ أغْدُولِكَيْ أتَجَهَّزَ مَعَهُ , فَأرْجِعُ وَلَمْ أقْضِ شَيْئًَ, وَأقُوْلُ فِيْ نَفْسِي, : أنَا قَادِرٌ عَلَي ذَلِكَ اذَا ارَدْتُ, فَلَمْ يَزَلْ يَتَمَادَي بِي حَتَّي اسْتَمَرَّ بالنَّاسِ الْجِدُّ , فَاصْبَحَ رَسُوْلُ اللهِ غاَدِيًا وَالْمُسْلِمُوْنَ مَعَهُ , وَلَمْ أقْضِ مِنْ جِهَازِي شَيْئًا , ثُمَّ غَدَوْتُ فَرَجَعْتُ وَلَمْ أقْضِ شَيْئًا فَلَمْ يَزَِلْ يَتَمَادَي بِيْ حَتَّي أسْرَعُوْا وَ تَفَارَطَ الْغَزْوُ فَهَمَمْتُ أَنْ أرْتَحِلَ فَأدْرَكَهُمْ , فَيَا لَيْتَنِي فَعَلْتُ, ثُمَّ لَمْ يُقَدَّرْ ذَلِكَ لِيْ فَطَفِقْتُ اِذَا خَرَجْتُ فِيْ النَّاسِ بَعْدَ خُرُوْجِ رَسُوْلِ اللهِ يَحْزُنُنِيْ أَنِّيْ لاَ أَرَي لِيْ اُسْوَةً, اِلاَّ رَجُلاً مَغْمُوصًا عَلَيْهِ فِي النِّفَاقِ اَوْ رَجُلاً مِمّنْ عَذَرَ اللهُ تَعَالَي مِنَ الضُّعَفَاءٍ

 நபி(ஸல்) அவர்கள் போருக்கான ஏற்பாட்டைச் செய்து முடித்திருந்தார்கள். அவர்களுடன் முஸ்லிம்களும் அதற்கான ஏற்பாட்டை முழுமையாக்கி விட்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் போருக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகக் காலையில் புறப்படலானேன். ஆனால் எதையும் செய்து முடிக்காமலேயே திரும்பிவருவேன்.

நான் என் மனத்திற்குள் சொல்லிக்கொள்வேன்: நாம் நாடிவிட்டால் எற்பாட்டைச் செய்துமுடிக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கத்தானே செய்கிறது!- இந்த எண்ணம் தான் தொடர்ந்து என்னைத் தாமிதப்படுத்திக் கொண்டே இருந்தது! மக்களோ இடைவிடாது முயற்சிகள் மேற்கொண்ட வண்ணம் இருந்தனர்!

நபி(ஸல்)அவர்கள் தோழர்களுடன் ஒரு நாள் அதிகாலையில் போருக்காகப் புறப்பட்டுவிட்டார்கள். நானோ அதுவரையில் எவ்வித ஏற்பாட்டையும் செய்து முடிக்காமலேயே இருந்தேன். பிறகு மறுநாள் காலையில் சென்றேன். எதையும் செய்து முடிக்காமலேயே திரும்பி வந்தேன். இவ்வாறு நான் தாமிதமாகிக் கொண்டே இருந்தேன். படைவீரர்களோ மிகவேகமாகப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தார்கள். வெகுதூரம் சென்றுவிட்டார்கள். நானும் பயணம் புறப்பட முனையத்தான் செய்தேன்., எப்படியேனும் அவர்ளைப் பிடித்துவிட வேண்டும் என நாடத்தான் செய்தேன். அந்தோ! அப்படி நான் செய்தேனில்லையே! எனது விதியில் அந்தப் பாக்கியம் எழுதி வைக்கப் பட்டிருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!

நபி(ஸல்) அவர்கள் சென்ற பிறகு நான் மக்கள் மத்தியில் சென்றபொழுது - நயவஞ்சகனென்று இழித்துக் கூறப்பட்டவனையும் (பெண்கள் முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகளைப் போன்ற) இயலாதவர்களையும் தக்க காரணம் உடையவர்களையும் தவிர என்னைப்போல் போருக்குக் கிளம்பாதிருந்த எவரையும் நான் காணவில்லை., இது எனக்கு மிகுந்த துயரம் அளிக்கலானது! 

وَلَمْ يَذْكُرْنِي رَسُوْلُ اللهِ ' حَتَّي بَلَغَ تَبُوْكًا , فَقَالَ وَهُوَ جَالِسٌ فِي الْقَوْمِ بِتَبُوْكٍ : مَا فَعَلَ كَعْبُ بْنُ مَالِكٍ؟ فَقَالَ رَجُلٌ مِنْ بَنِيْ سَلِمَةَ: يَا رَسٌوْلَ اللهِ حًَبَسَهُ بُرْدَاهُ, وَالنَظَرُ فِيْ عِطْفِيْهِ فَقَالَ لَهُ مُعَادُ بْنُ جَبَلٍ : بِئْسَ مَا تَقُوْلُ وَاللهِ يَا رَسُوْلَ اللهِ مَا عَلِمْناَ عَلَيْهِ الاَّ خَيْرًا, فَسَكَتَ رَسُوْ لُ الله ِ فَبَيْنَمَا هُوْ عَلَي ذَلِكَ رَأي رَجُلاً مُبَيَّضًا يَزُوْلُ بِهِ السَّرَابُ . فَقَالَ رَسُوْلُ اللهِ : كُنْ أبَا خَيْثَمةَ, فَأذَا هُوَ أبُو خَيْثَمَةَ  الاَنْصَارِي وَهُ الذِّيْ تَصَدَّقَ بِصَاعِ التَّمْرِ حِيْنَ لَمَزَهُ الْمُنَافِقُوْنَ

 நபி (ஸல்) அவர்கள் தபூக் சென்றடையும் வரையில் என்னைப் பற்றி எதுவும் கூறவில்லை. தபூக்கில் மக்கள் மத்தியில் அவர்கள் அமர்ந்திருந்தபொழுது கேட்டார்கள்: கஅப் பின் மாலிக் என்ன செய்தார்? பனூ ஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் பதில் சொன்னார்: அல்லாஹ்வின் தூதரே! அவர் அணிந்திருந்கும் வேஷ்டியும் மேலங்கியும் அவரைத் தடுத்துவிட்டன! தமது ஆடையழகைக் கண்டு பூரிப்படைவதே அவரது வேலை!

அதற்கு முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: நீ எவ்வளவு மோசமான வார்த்தையைக் கூறிவிட்டாய்! அல்லாஹ்வின்தூதரே! நாங்கள் அவரது விஷயத்தில் நல்லதைத் தவிர வேறெதையும் அறிந்திருக்கவில்லை! - நபி (ஸல்) அவர்கள் மௌனமாகிவிட்டார்கள்.

இதற்கிடையில் வெள்ளை ஆடை அணிந்த ஒருமனிதர் பாலைவனத்தில் கானல் அசைவதுபோல் வந்துகொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். இவர் அபூ கைஸமா- ஆகத்தான் இருக்கவேண்டும் என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அபூ கைஸமாதான் வந்து கொண்டிருந்தார்! இவர் ஒரு அன்ஸாரித் தோழர்., இவர்தான் ஒருமரைக்கால் பேரீத்தம் பழத்தை ப்போர்) நிதியாக வழங்கினார். அப்பொழுது அவரை நயவஞ்சகர்கள் குறை பேசினார்கள்.

21 தபூக் யுத்தமும் தடுமாற்றமும் - 2

சிந்தையில் இருந்து பொய் அகன்றுவிட்டது!

رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ للِنَّاسِ , فَلَمَّا فَعَلَ ذَلِكَ جَاءَهُ الْمُخَلَّفُوْنَ يَعْتَذِرُوْنَ اِلَيْهِ وَ يَحْلِفُوْنَ لَهُ, وَ كَانُوْا بِضْعًا وَ ثَمَانِيْنَ رَجُلاً فَقُبِلَ مِنْهُمْ عَلاَنِيُتُهُمْ وَ بَايَعَهُمْ وَ اسْتَغْفَرَلَهُمْ وَ وَكَّلَ سَرَائَهُمْ اِلَي اللهِ تَعَالَي
கஅப் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தபூக்கில் இருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் செய்தி எனக்குக் கிடைத்தபொழுது கவலை என்னை ஆட்கொண்டது! எப்படிப் பொய் சொல்லலாமெனச் சிந்திக்க ஆரம்பித்தேன். நாளை நபியவர்களின் கோபத்தை விட்டும் எப்படித் தப்பிக்கப் போகிறோமோ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இது தொடர்பாக எனது குடும்பத்தில் விஷயஞானம் உடைய அனைவரிடமும் ஆலோசனை கலந்தேன்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் இதோ வந்து விட்டார்கள் என்று சொல்லப்பட்ட பொழுது (எனது சிந்தையிலிருந்து) பொய் அகன்றுவிட்டது. பொய் சொல்லி எந்த வகையிலும் அவர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பது எனக்கு உறுதியாகிவிட்டது. எனவே அவர்களிடம் உண்மையே கூறுவது என்று உறுதியான முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் அதிகாலையில் வருகை தந்தார்கள். அவர்கள் எப்போது பயணத்திலிருந்து திரும்பி வந்தாலும் முதலில் பள்ளிவாசல் சென்று இரண்டு ரக்அத் தொழுவார்கள். அப்படியே அமர்ந்து மக்களிடம் உரையாடுவார்கள்.

அப்படி அமர்ந்திருந்தபொழுது - போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்டவர்கள் வந்து நபியவர்களிடம் சாக்குப் போக்குச் சொன்னார்கள்., அவர்களிடம் சத்தியம் செய்தார்கள். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை எண்பதுக்கும் மேல்இருந்தது. அந்த மனிதர்கள் வெளிப்படையாய் எடுத்துவைத்த வாதங்களை நபியவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் வாங்கினார்கள். அவர்களின் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனையும் செய்தார்கள். அவர்களின் உள்ளத்து ரகசியங்களை உயர்வுமிக்கவனாகிய அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்கள்! 

حَتَّي جِئْت , فَلَمَّا سَلَّمْتُ تَبَسَّمَ تَبَسُّمَ الْمُغْضَبِ ثُمَّ قَالَ: تَعَالَ, فَجِئْتُ أمْشِي حَتَّي جَلَسْتُ بَيْنَ يَدَيْهِ, قَال لِي: مَا خَلَّفَكِ ؟ ألَمْ تَكُنْ قَدْ أبْتَعْتَ ظَهْرَكَ! قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِ اِنِّي وَ اللهِ لَوْ جَلَسْتُ عِنْدَ غَيْرِكَ مِنْ أهْلِ الدُّنْيَا لَرَأيْتُ أنِّي سَأخْرُجُ مِنْ سَخْطِهِ بِعُذْرٍ, لَقَدْ اُعْطِيْتُ جدَلاً, وَلَكِنِي وَاللهِ لَقَدْ عَلِمْتُ لَئِنْ حَدَّثْتُكَ الْيَوْمَ حَدِيْثَ كِذْبٍ تَرْضَي بِهِ عَنِّي بِهِ لَيُوْشِكَنَّ اللهُ يُسْخِطُكَ عَلَيَّ, وَ اِنْ حَدَّثْتُكَ حَدِيْثَ صِدْقٍ تَجِدُ عَلَيَّ فِيْهِ اِنِّي لأرْجُوْ فِيْهِ عُقْبَي اللهِ عَزَّ وَ جَلَّ , وَاللهِ مَا كَانَ لِيْ مِنْ عُذْرٍ , وَاللهِ مَا كُنْتُ قَطُّ أقْوَي وَ لاَ أيْسَرَ مِنِّي حَيْنَ تَخَلَّفْتُ عَنْكَ قَالَ : فَقَالَ رَسُوْلُ اللهِ  : أمَّا هَذَا فَقَدْ صَدَقَ , فَقُمْ حَتَّي يَقْضِيَ اللهُ فِيْكَ

கடைசியாக நான் சென்றேன். நான் ஸலாம் கூறியபொழுது நபி (ஸல்) அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தியவாறு புன்னகை செய்தார்கள். பிறகு சொன்னார்கள்: 'அருகே வாரும்' - நான் சென்று நபியவர்களின் முன்னால் அமர்ந்தேன் என்னிடம் கேட்டார்கள்: நீர் ஏன் புறப்படாமல் இருந்துவிட்டீர்? நீர் ஒட்டகத்தை வாங்கி வைத்திருக்கவில்லையா?,,

நான் சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக!தாங்களின் சமூகத்திலன்றி உலகில் வேறொருவர் முன்னால் நான் அமர்ந்திருந்தால் ஏதேனும் சாக்குப்போக்குச் சொல்லி அவரது கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமென நான் கருதியிருப்பேன். அந்த அளவுக்கு வாதம் புரியும் திறனை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான்.

ஆனாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உறுதியாக அறிந்துள்ளேன்: அதாவது இன்று நான் தாங்களிடம் பொய் சொல்லி அதனடிப் படையில் தாங்கள் என்னைப் பொருந்திக் கொண்டாலும் - அல்லாஹ் என் மீது உங்களைக் கோபம் கொள்ளச் செய்தே தீருவான்! நான் உங்களிடம் உண்மை உரைத்து, அதனால் நீங்கள் என் மீது கோபம்கொண்டால் - நிச்சயமாக நான் அது விஷயத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னிடம் தக்க காரணம் எதுவுமில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உங்களுடன் (போருக்குப்)புறப்படாமல் தங்கிவிட்ட பொழுது நல்ல ஆற்றல் உடையவனாக - வசதியுடையவனாகவே இருந்தேன்., முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு!
அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: இவர்தான் உண்மை சொல்லியுள்ளார். நீர் செல்லலாம்., அல்லாஹ் உம் விஷயத்தில் தீர்ப்பளிக்கும் நேரத்தை நீர் எதிர்பார்த்திரும்,,

وَسًارَ رِجَالٌ مِنْ بَنِي سَلِمَةَ فَاتَّبَعُوْنِي , فَقَالُوْالِي: وَاللهِ مَا عَلِمْنَاكَ أذْنَبْتَ ذَنْبًا قَبْلَ هَذَا, لَقَدْ عَجَزْتَ فِي أنْ لاَ تَكُوْنَ اعْتَذَرْتَ اِلَي رَسُوْلِ اللهِ  بِمَا اعْتَذَرَ الْمُخَلَّفُوْنَ فَقَدْ كَانَ كَافِيْكَ ذَنْبَكَ اسْتِغْفَارُ رَسُوْلِ اللهِ  لَكَ, قَالَ: فَوَاللهِ مَا زَالُوْا يُؤَنِّبُوْنَنِي حَتَّي أرَدْتُّ أنْ ارْجِعَ اِلَي رَسُوْلِ اللهِ  فَاُكَذِّبَ نَفْسِيْ, ثُمَّ قُلْتُ لَهُمْ: هَلْ لَقِيَ هَذَا مَعِيَ مِنْ أحَدٍ ؟ قَالُوْأ: نَعَمْ لَقِيَهُ مَعَكَ رَجُلاَنِ قَالاَ مِثْلَ مَا قُلْتَ, وَقِيْلَ لَهُمَا مِثْلَ مَا قِيْلَ لَكَ, قَالَ قُلْتُ : مَنْ هُمَا؟ قَالُوْأ: مُرَارَةُ بْنُ الرَّبِيْعِ الْعَمْرِيُّ , وَ هِلاَلُ بْنُ أمَيَّةَ الْوَاقِفِيُّ, قَالَ: فَذَكَرُوْا لِيْ رَجُلَيْنِ قَدْ شَهِدَا بَدْرًا فِيْهِمَا أسْوَةٌ. قَالَ : فَمَضَيْتُ حِيْنَ ذَكَرُوْهُمَا لِيْ.

ஸலாம் சொல்வேன்.,
அருகிலேயே தொழுவேன்,,

பனூ ஸலிமா கிளையைச் சேர்ந்த சிலர் என்னைத் தொடர்ந்து நடந்து வந்தார்கள். என்னிடம் சொன்னாகள்:

அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதற்கு முன்பு நீர் எந்தப் பாவமும் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. போருக்குப் புறப்படாதிருந்த ஏனையோர் சாக்குப்போக்கு சொன்னது போல் நீரும் சாக்குப்போக்குச் சொல்வதற்கில்லாமல் செய்துவிட்டீரே! நபியவர்கள் உமக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தனை செய்வதே உமது பாவத்திற்குப் பரிகாரமாக - போதுமானதாக ஆகியிருக்குமே!,,

கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவ்வாறு அவர்கள் என்னை நச்சரித்துக் கொண்டே இருந்தனர். எந்த அளவுக்கெனில், நபியவர்களிடம் திரும்பிச் சென்று முன்பு நான் சொன்னது உண்மையல்ல என்று சொல்லிவிடலாமா? என்றுகூட நான் சிந்தித்தேன்,,
- பிறகு அந்த மனிதர்களிடம் கேட்டேன்: என்னைப் போல் இந்நிலைக்கு ஆளானோர் எவரேனும் உண்டா?,,

அவர்கள் சொன்னார்கள்: இரண்டு போர் உம்மைப்போல் இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். நீர்சொன்னது போன்றே அவர்களும் சொன்னார்கள். உமக்குச் சொல்லப்பட்டது போன்றே அவர்களிடமும் சொல்லப்பட்டுள்ளது,,
'அவர்கள் யார் யார்?'

'முறாறா பின் ரபீஇல் ஆமிரி, ஹிலால்பின் உமையா -அல் வாகிஃபி'

கஅப் (ரலி)அவர்கள் சொல்கிறார்கள்: 'அவர்கள் என்னிடம் சொன்ன இரண்டு பேரும் எப்படிப்பட்டவர்கள் எனில், இருவரும் பத்றுப் போரில் கலந்து கொண்டவர்கள்., அவ்விருவரிலும் எனக்கு ஒரு முன்மாதிரி இருந்தது!'

கஅப் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: அவ்விருவரைப் பற்றியும் மக்கள் என்னிடம் சொன்போது நான் பேசாமல் சென்றுவிட்டேன்,,

وَنَهَي رَسُوْلُ الله ِ عَنْ كَلاَمِنَا أيُّهَا الثَّلاَثَةُ مِنْ بَيْنِ مَنْ تَخَلَّفَ عَنْهُ. قَالَ: فَاجْتَنَبَنَا النَّاسُ - أوْ قَالَ : تَغَيَّرُوْا لَنَا - حَتَّي تَنَكّرَتْ لِي فِيْ نَفْسِي الأرْضُ, فَمَا هِيَ بِالأرْضِ التِّي أعْرِفُ, فَلَبِثْنَا عَلَي ذَلِكَ خَمْسِيْنَ لَيْلَةً. فَأمَّا صَاحِبَايَ فَاسْتَكَانَا وَقَعَدَا فِيْ بُيُوْتِهِمَا يَبْكِيَانِ, وَأمَّا أنَا فَكُنْتُ أشَبَّ الْقْمِ وَ أجْلَدَهُمْ , فَكُنْتُ أخْرُجُ فَأشْهَدُ الصَّلاَةَ مَعَ الْمُسْلِمِيْنَ, وَأطُوْفُ فِيْ الأسْوَاقِ وَلاَ يُكَلِّمُنِي أحَدٌ, وَآتِيْ رَسُوْلَ اللهِ  فَاُسَلِّمُ عَلَيْهِ, وَهُوَ فِيْ مَجْلِسِهِ بَعْدَ الصَّلاَةِ فَاقُوْلُ فِي نَفْسِي : هَلْ حَرَّكَ شَفَتَيْهِ بِرَدِّ السَّلاَمِ أمْ لاَ؟

 யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பின் தங்கியவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் எவரும் பேசக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். மக்கள் எங்களை விட்டும் ஒதுங்கிக் கொண்டார்கள். (அல்லது இந்த இடத்தில் கஅப்அவர்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம்:) எங்கள் விஷயத்தில் மக்களின் நடவடிக்கை மாறிவிட்டது,

எனது மனத்தில் விரக்தி ஏற்பட்டு இந்தப் பூமியே என்னைப் பொறுத்து அந்திய பூமியாகத் தென்பட்டது! நான் முன்பு அறிந்த பூமியாக அது இல்லை! ஐம்பது இரவுகளாக இந்நிலையிலேயே நாங்கள் இருந்தோம்,,

என்னுடைய இருதோழர்களோ அடங்கிவிட்டார்கள். அழுத வண்ணம் வீ;ட்டிலேயே முடங்கிக்கிக் கிடந்தார்கள். மூன்று பேரில் நான் தான் வயதில் குறைந்தவனாகவும் வலிமை மிக்கவனாகவும் இருந்தேன்.

நான் வெளியே செல்வேன். முஸ்லிம்களோடு தொழுகையில் கலந்துகொள்வேன். கடை வீதிகளிலே சுற்றுவேன். யாருமே என்னுடன் பேசமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருக்கும்போது அவர்களிடம் ஆஜராவேன்., அவர்களுக்கு ஸலாம் சொல்வேன். ஸலாத்திற்கு பதில் சொல்லிட உதடுகளை அசைக்கிறார்களா? இல்லையா? என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். 

21 தபூக் யுத்தமும் தடுமாற்றமும் - 3  
உண்மைக்குக் கிடைத்த பரிசு

நான் வெளியே செல்வேன். முஸ்லிம்களோடு தொழுகையில் கலந்துகொள்வேன். கடை வீதிகளிலே சுற்றுவேன். யாருமே என்னுடன் பேச மாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருக்கும் போது அவர்களிடம் ஆஜராவேன்., அவர்களுக்கு ஸலாம் சொல்வேன். ஸலாத்திற்கு பதில் சொல்லிட உதடுகளை அசைக்கிறார்களா? இல்லையா? என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.

பிறகுஅவர்களுக்கு அருகிலேயே தொழுவேன். ஓரக்கண்ணால் அவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன். நான் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் பொழுது நபியவர்கள் என்னைப் பார்ப்பார்கள். நான் அவர்களின் பக்கம் முன்னோக்கும் பொழுது என்னை விட்டும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள்.

இவ்வாறாக முஸ்லிம்களின் ஒட்டுமொத்தப் புறக்கணிப்பு நீடிப்பதை நான் உணர்ந்தபோது - ஒருநாள் அப்படியே நடந்துசென்றேன். அபூ கதாதாவின் தோட்டத்துச் சுவர் ஏறி உள்ளே சென்றேன். அவர் என் சிறிய தந்தையின் மகன்! எனக்கு மிகவும் பரியமானவர். அவருக்கு நான் ஸலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் எனது ஸலாத்திற்கு பதில் சொல்லவில்லை. நான் கேட்டேன்: அபூ கதாதாவே! அல்லாஹ்வைக் கொண்டு சத்தியமிட்டுக் கேட்கிறேன்: நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியாதா? - அவர் மௌனமாக இருந்தார். மீண்டும் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்து அவரிடம் அவ்வாறு கேட்டேன். அப்பொழுதும அவர் மௌனமாகவே இருந்தார். மூன்றாவது தடவையும் கேட்டேன். அப்பொழுது சொன்னார். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தான் மிகவும் அறிந்தவர்கள்,,

என் கண்களிரண்டும் கண்ணீர் வடித்தன. வந்த வழியே திரும்பி சுவர் ஏறித்தாவி வெளியே வந்தேன்.

அப்படியே மதீனாவின் கடைவீதியில் நான் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது, உணவுப் பொருள்களை மதீனாவில் விற்பனை செய்ய வந்திருந்த சிரியா தேசத்து விவசாயி ஒருவன் அங்கே, கஅப் பின் மாலிக்கை அறிவித்துக் கொடுப்பவர் யார்? என்று கேட்;டுக்கொண்டிருந்தான். உடனே மக்கள் என் பக்கம் சுட்டிக் காட்டி அவனுக்கு என்னைத் தெரியப்படுத்தத் தொடங்கினார்கள். உடனே அவன் என்னிடம் வந்தான். கஸ்ஸான் மன்னன் எழுதிய ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தான். நான் எழுத்தறிவுடையவனாக (அதாவது எழுதவும் படிக்கவும் தெரிந்தவனாக) இருந்தேன். அந்தக் கடிதத்தைப் படித்தேன். அதில் எழுதப்பட்டிருந்தது:

أمَّا بَعْدُ فَاِنَّهُ قَدْ بَلَغَنَا أَنَّ صَاحِبَكَ قَدْ جَفَاكَ, وَلَمْ يَجْعَلْكَ اللهُ بِدَارِ هَوَانٍ وَلاَ مَضِيْعَةٍ, فَالْحَقْ بِنَا نُوَاسِكَ, فَقُلْتُ حَيْنَ قَرَأتُهَا : وَهَذِهِ أيْضًا مِنَ الْبَلاَءِ فَتَيَمَّمْتُ بِهَا التَّنُّوْرَ فَسَجَرْتُهَا

நான் எழுதுவது என்னவெனில், உம்முடைய தோழர் உம்மை வெறுத்து ஒதுக்கிவிட்டார் எனும் செய்தி எங்களுக்குக் கிடைத்துள்ளது. கேவலமும் உரிமையிழப்பும் உடைய நாட்டில் அல்லாஹ் உம்மை வைத்திருக்கவேண்டாம். எங்களிடம் வந்துவிடும். நாங்கள் உம்மை உபசரிப்போம்,.

அதைப் படித்தபொழுது - இதுவும் ஒருசோதனையே!,,என்று சொன்னேன், பிறகு அந்தக் கடிதத்தை அடுப்பில் தூக்கி வீசி எரித்துவிட்டேன்.

- இவ்வாறு ஐம்பதில் நாற்பது நாட்கள் கழிந்துவிட்டபொழுது - வஹி எனும் இறையருட்செய்தி இறங்காபொழுது நபியவர்களின் தூதுவர் என்னிடம் வந்து சொன்னார்: நீர் உம் மனைவியைவிட்டும் பிரிந்திருக்குமாறு நபியவர்கள் உமக்குக் கட்டளையிடுகிறார்கள்,.

அவளை நான் விவாவரத்து செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்யவேண்டும் ? என்று நான் கேட்டேன்,

'இல்லை., அவளைவிட்டும் விலகியிரும்! அவளை நெருங்கக் கூடாது'' என்றார் அவர்.  இதேபோன்ற கட்டளையை என்னிரு தோழர்களுக்கும் நபி (ஸல்) அனுப்பியிருந்தார்கள். நான் என் மனைவியிடம் சென்னேன்: நீ உன் பெற்றோரிடம் சென்றுவிடு! அல்லாஹ் இந்த விஷயத்தில் ஒரு தீர்ப்பை அளிக்கும் வரையில் அவர்களிடம் தங்கியிரு,,

ஹிலால் பின் உமையாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து சொன்னாள்: ஹிலால் பின் உமையா தள்ளாத வயதுடைய முதியவராக இருக்கிறார். அவருக்குப் பணிவிடை செய்பவர் யாரும் இல்லை. நான் அவருக்குப் பணிவிடை செய்வதைத் தாங்கள் விரும்பவில்லையா? என்ன?,,
அதற்கு நபியவர்கள் சொன்னார்கள்: அப்படியில்லை., ஆனால் அவர் உன்னை நெருங்கக்கூடாது,,

அதற்கு அந்தப்பெண்மணி கூறினாள்: 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எந்தச் செயலின் பக்கமும் எந்த அசைவும் அவரிடம் இல்லை. அவரது விவகாரம் இவ்வாறு ஆனதிலிருந்து இன்றுவரை அவர் ஓயாது அழுது கொண்டே இருக்கிறார்'

என்னுடைய குடும்பத்தினர் சிலர் என்னிடம் சொன்னார்கள்: உமது மனைவி விஷயத்தில் நபியவர்களிடம் நீர் அனுமதி கேட்கக்கூடாதா?,,

நான் சொன்னேன்: அவள் விஷயத்தில் நபியவர்களிடம் நான் அனுமதி கேட்டால் நபியவர்கள் சொல்லப் பேவதென்ன என்பது எனக்கு என்ன தெரியும்? நானோ இளைஞனாக இருக்கிறேன்,,

இதேநிலையில் பத்து நாட்கள் கழிந்து சென்றன. எங்களோடு எவரும் பேசக்கூடாது என்று தடைவிதித்து ஐம்பது நாட்கள் நிறைவடைந்தன!

உண்மைக்குக் கிடைத்த பரிசு

பிறகு ஐம்பதாவது நாள் அதிகாலையில் எங்களது வீடொன்றின் மாடியில் நான் ஃபஜ்ர் தொழுகை தொழுதுகொண்டிருந்தேன். நான் அந்த நிலையிலே - அதாவது, எங்களைப் பற்றி (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ளது போல் - உயிர் வாழ்வதே எனக்குக் கஷ்டமாகிவிட்டது. பூமி இவ்வளவு விரிவாக இருந்தும் என்னைப் பொறுத்து குறுகிப் போய்விட்டது,, என்ற அந்நிலையிலே இருந்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஸல்வு என்ற மலை மீதேறி சப்தமிட்டு அழைப்பவரின் அழைப்பைக் கேட்டேன்! ' ஓ!....! கஅப் பின் மாலிக்! நற்செய்தி பெறுவீராக! '

-அப்படியே ஸஜ்தாவில் விழுந்தேன். நமது துன்பம் நீங்கியது என்பதை அறிந்தேன்!

நபி(ஸல்)அவர்கள் ஸுப்ஹு தொழுதபொழுது, எங்களது பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு எங்கள் மீது மீண்டும் கருணை பொழிந்துவிட்டான் என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

فَذَهَبَ النَّاسُ يُبَشِّرُوْنَنَا , فَذَهَبَ قِبَلَ صَاحِبَيَّ مُبَشِّرُوْنَ, وَرَكَضَ رَجُلٌ اِلَيَّ فَرَسًا وَسَعَي سَاعٍ مِنْ أسْلَمَ قِبَلِيْ وَ أوْفَي عَلَي الْجَبَلِ, وَكَانَ الصَّوْتُ أسْرَعَ مِنَ الْفَرَسِ, فَلَمَّا جَاءَنِِيَ الَّذِي سَمِعْتُ صَوْتَهُ يُبَشِّرُنِي نَزَعْتُ لَهُ ثَوْبَيَّ فَكَسَوْتُهُمَا اِيَّاهُ بِبَشَارَتِهِ, وَاللهِ مَا أمْلِكُ غَيْرَهُمَا يَوْمَئِذٍ , وِاسْتَعَرْتُ ثَوْبَيْنِ فَلَبِسْتُهُمَا وَانْطَلَقْتُ أتَأمَّمُ رَسُوْلَ اللهِ  يَتَلَقَّانِيَ النَّاسُ فَوْجً فَوْجًا يُهَنِّئُوْنَنِي بِالتَوْبَةِ وَ يَقُوْلُوْنَ لِيْ: لِتَهْنِكَ تَوْبَةُ اللهِ عَلَيْكَ,

உடனே மக்கள் அந்த நற்செய்தியை எங்களுக்கு அறிவித்திடப் புறப்பட்டு விட்டார்கள். என் இரு தோழர்களை நோக்கியும் நற்செய்தியாளர்கள் சென்றனர். ஒருவர் குதிரை மீது ஏறி என்னை நோக்கி விரைந்து வந்தார். அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒருவரோ என்னை நோக்கி விரைந்து வந்தவர் மலை உச்சியிலே ஏறிவிட்டார். அவரது குரலின் வேகம் குதிரையை விடவும் விரைவானதாக இருந்தது.

எவரது உரத்த குரலினால் நற்செய்தியை நான் செவியுற்றேனோ அவர் என்னிடம் வந்த போது அவரது நற்செய்திக்குப் பரிசாக என்னுடைய இரண்டு ஆடைகளையும் களைந்து அவற்றை அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அப்பொழுது அவற்றைத் தவிர வேறு ஆடைகள் என்னிடம் இல்லை. பிறகு இரண்டு ஆடைகளை இரவல் வாங்கி அணிந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் ஆஜராக நாடியவாறு புற்பட்டேன். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்தனர். பாவமன்னிப்புக் கிடைத்ததன் பேரில் என்னை வாழ்த்திக் கொண்டிருந்தனர்! மக்கள் என்னிடம் சொன்னார்கள்: உமது பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டதன் பேரில் உமக்கு வாழ்த்துக்கள்!,,

அவ்வாறாக மஸ்ஜிதுக்குள் நுழைந்தேன். அங்கு நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் மக்கள் அமர்ந்திருந்தனர். தல்ஹா பின் உபைதுல்லாஹ் எழுந்து என்னை நோக்கி ஓடி வந்தார். எனக்குக் கைலாகு கொடுத்தார். எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவரைத் தவிர முஹாஜிர்கள் வேறெவரும் எழுந்து வரவில்லை. தல்ஹா (ரலி) அவர்களின் இந்த உபகாரத்தை கஅப் (ரலி) அவர்கள் என்றென்றும் மறக்காமல் இருந்தார்கள்!
கஅப் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:நான் நபி(ஸல்)அவர்களுக்கு ஸலாம் சொன்னபொழுது - நபியவர்கள் கூறினார்கள்., அவர்களின் முகம் மகிழ்ச்சியால் பிரகாசித்துக்கொண்டிருந்தது: உம் அன்னை உம்மை ஈன்றெடுத்த நாள் முதல் உமக்குக் கிடைக்கப்பெறாத சிறந்ததொரு நாளினைக் கொண்டு மகிழ்வு அடைவீராக!,, 

நான் கேட்டேன்: இது தாங்களிடம் நின்றும் உள்ளதா? அல்லாஹ்வின் புறத் திலிருந்து வந்ததா?,,

நபியவர்கள்: இல்லை., இது, கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும்,,

- நபி (ஸல்)அவர்கள் மகிழ்ச்சியடைந்தால் அவர்களின் முகம் ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஏதோ! அது சந்திரனின் ஒருபகுதியைப் போலிருக்கும். நபியவர்களின் இந்நிலையை நாங்கள் அறிபவர்களாய் இருந்தோம்.

நான் நபி(ஸல்) அவர்களின் முன்னால் உட்கார்ந்தபொழுது சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே! எனக்கு மன்னிப்புக் கிடைத்ததன் பொருட்டு நன்றி செலுத்திடவே எனது எல்லாச் சொத்துக்களையும் அல்லாஹ் - ரஸூலின் பாதையில் தர்மம் செய்கிறேன்,,

அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: 'உமது சொத்தில் சிறிது அளவை உமக்காக வைத்துக் கொள்ளும். இதுவே உமக்குச் சிறந்ததாகும்'
நான் சொன்னேன்: கைபரில் இருந்து எனக்குக் கிடைத்த பங்கை எனக்காக நான் வைத்துக்கொள்கிறேன்,,

மேலும் நான்சொன்னேன்: அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசியதனால் தான் அல்லாஹ் எனக்கு ஈடேற்றம் அளித்துள்ளான். எதிர்காலத்தில் என் ஆயுள் முழுவதும் உண்மையே நான் பேசுவேன் என்பதும் - எனக்கு மன்னிப்பு கிடைத்ததன் பொருட்டு நான் செலுத்தும் நனிறியாக உள்ளது,,

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில், உண்மையே பேசுவேன் என நான் வாக்குறுதி கொடுத்த நாளில் இருந்து இன்று வரை முஸ்லிம்களில் எவரைக் குறித்தும் (நான் அறியேன் அதாவது) உண்மை பேசும் விஷயத்தில் அல்லாஹ் என்னைச் சோதனைக் குள்ளாக்கியதை விடவும் அழகாக அல்லாஹ் அவரைச் சோதனைக்குள்ளாகியதை நான் அறியேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபியவர்களிடம் அவ்வாறு நான் வாக்குறுதி கொடுத்ததில் இருந்து இன்றைய தினம் வரை எந்தச் சூழ்நிலையிலும் பொய்பேச நான் நாடியதே இல்லை. எதிர் காலத்திலும் அதிலிருந்து அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு,, 

قَالَ:فَاَنْزَلَ اللهُ تَعَالَي: { لَقَدْ تَابَ اللهُ عَلَي النَّبِيِّ وَالْمُهَاجِرِيْنَ وَالاَنْصَارِالَّذِيْنَ اتَّبَعُوْهُ فِي سَاعًةِ العُسْرَةِ } حتَّي بَلَغَ : اِنَّهُ بِهِمْ رَؤُوْفٌ رَحِيْمٌ. وَعَلَي الثَّلاَثَةِ الّذِيْنَ خُلِّفُوْا حَتَّي اِذَاضَاقَتْ عَلَيْهِمُ الاَرْضُ بِمَا رَحُبَتْ}حَتَّي بَلَغَ { اتَّقُوْا اللهَ وَكُوْنُوا مَعَ الصَّادِقِيْنَ } سورة التوبة ,الآية: 117- 119

கஅப் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள்: அப்போது அல்லாஹ் இறக்கியருளிய வசனம் இதுதான்: 'நபியையும்-துன்பம் சூழ்ந்த நேரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த முஹாஜிர்களையும் அன்ஸர்களையும் அல்லாஹ் பொறுத்தருளினான். அவர்களில் ஒருசிலரின் உள்ளங்கள் நெறிதவறுதலின் பால் சற்று சாய்ந்துவிட்டிருந்த பிறகும்! (ஆனால் அவர்கள் நெறிதவறிச் செல்லாமல் நபிக்கு பக்கபலமாக இருந்தார்கள்! அப்பொழுது) அல்லாஹ் அவர்களை மன்னித்தான். திண்ணமாக அவன் அவர்கள் விஷயத்தில் அதிகப் பரிவும் கருணையும் கொண்டவனாக இருக்கிறான். மேலும் விவ காரம் ஒத்திபோடப்பட்டிருந்த மூவரையும் அவன் மன்னித்துவிட்டான். அவர்களது நிலைமை எந்தஅளவு மோசமாகிவிட்டதெனில்,பூமி இத்துணை விரிவாய் இருந்தும் அவர்களைப் பொறுத்து அது குறுகி விட்டிருந்தது., அவர்கள் உயிர் வாழ்வதே கஷ்டமாகிவிட்டது. மேலும் அல்லாஹ்விடம் இருந்து தப்பிப்பதற்கு அவனது அருளின் பக்கம் திரும்புவதைத் தவிர வேறுபுகலிடம் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டார்கள். பின்னர் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் அவர்கள் மீண்டு வர வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களின் மீது கருணை பொழிந் தான். திண்ண மாக அவன் பெரும் மன்னிப்பாளன்., கருணை மிக்கவன். இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வாய்மையாளர்களுடன் இருங்கள்,, (9: 117 - 119)

21 தபூக் யுத்தமும் தடுமாற்றமும் - 4
முதல் கோணல் முற்றும் கோணல்

قَالَ كَعْبٌ : وَاللهِ مَا اَنعَمَ اللهُ عَلَيَّ مِنْ نِعْمَةٍ قَطُّ بَعْدَ اِذْ هَدَانِيَ اللهُ لِلاِسْلاَمِ أعْظَمَ فِي نَفْسِي مِنْ صِدْقِي رَسُوْلَ اللهِ  أنْ لاَ اَكُوْنَ كَذَبْتُهُ, فَاَهْلِكَ كَمَا هَلِكَ الَّذِيْنَ كَذَبُوْا ., اِنَّ اللهَ تَعَالَي قَالَ لِلَّذِيْنَ كَذَبُوْا حِيْنَ أنْزِلَ الْوَحْيُ شَرَّ مَا قَالَ لاِحَدٍ, فَقَالَ اللهُ تَعَالَي : سَيَحْلِفُوْنَ بِاللهِ لَكُمْ اِذَا انْقَلَبْتُمْ اِلَيْهِمْ لِتُعْرِضُوْا عَنْهُمْ فَأعْرِضُوْا عَنْهُمْ أنَّهُمْ رِجْسً وَمَأْوَاهُمْ جَهَنَّمُ جَزَاءً بِمَا كَانُوْا بَكْسِبُوْنَ. يَحْلِفُوْنَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ فَاِنْ تَرْضَوْا عَنْهُمْ فَاِنَّ اللهَ لاَ يَرْضَي عَنِ الْقَوْمِ الْفَاسِقِيْنَ } - سورة التوبة ,الآية: 95 -96

கஅப்; (ரலி) அவர்கள் மேலும் சொல்கிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இஸ்லாத்தின் பால் அல்லாஹ் எனக்கு வழிகாட்டிய பின்பு நபி (ஸல்)அவர்களிடம் நான் உண்மை பேசியதைவிட பெரியதோர் அருட் கொடையை அல்லாஹ் என் மீது அருளிடவில்லை! அவர்களிடம் நான் பொய்சொல்லி இருந்தால் பொய்சொன்னவர்கள் அழிந்துபோனதுபோல் நானும் அழிந்துபோயிருப்பேன். நிச்சயமாக அல்லாஹ் (வஹி எனும் இறையருட் செய்தியை இறக்கியருளியபொழுது) பொய் சொன்னவர்கள் குறித்து மிகவும் மோசமான நிலையைக் கூறினான்.,

'வேறு எவர் விஷயத்திலும் அப்படிக் கூறவில்லை! அல்லாஹ் கூறினான்;: நீங்கள் அவர்களிடம் திரும்பிவரும் பொழுது அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்திட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலை யில் அவர்கள் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்வார்கள். எனவே நீங்கள் அவர்களைக் கண்டு கொள்ளாமலே இருந்துவிடுங்கள். ஏனெனில் அவர்கள் அசுத்தமானவர்கள். உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகம்தான். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீமைகளுக்கு இதுவே கூலியாகும். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டிட வேண்டும் எனும் நோக்கத்தில் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டா லும் திண்ணமாக அல்லாஹ், பாவிகளான இத்தகைய மக்கள்மீது திருப்பதி கொள்ளமாட்டான்,,(9: 95-96)

கஅப் (ரலி) அவர்கள் மேலும் சொல்கிறார்கள்: 'எவர்கள் நபியவர்களிடம் வந்து சத்தியம் செய்தார்களோ, நபியவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் வாங்கினார்களோ அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோரினார்களோ அத்தகையவர்களின் விவ காரத்தைவிடவும் எங்கள் மூவரின் தீர்ப்பு பிற்படுத்தப்பட்டது. அல்லாஹ் பின் வருமாறு குர்ஆன் வசனத்தை இறக்கியருளி எங்கள் விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் வரையில் நபி (ஸல்) அவர்கள் எங்கள் விவகாரத்தை ஒத்தி போட்டார்கள்!' விவகாரம் ஒத்திபோடப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்,,)

- இங்கு குல்லிஃபூ  எனும் வார்த்தை, நாங்கள் மூவரும் யுத்தத்தில் கலந்துகொள்ளாமல் பின்தங்கியிருந்தவர்கள் எனும்ரீதியில் சொல்லப்பட்டதல்ல, மாறாக, எவர்கள் நபியவர்களிடம் வந்து சத்தியம் செய்து சாக்குப்போக்குச் சொல்லி - நபியவர்களும் அதனை ஒப்புக் கொண்டார்களோ அவர்களைவிடவும் எங்களது தீர்ப்பை பிற்படுத் துதல், எங்களது விவகாரத்தை ஒத்திபோடுதல் என்பதே கருத்து. (நூல்: புகாரி, முஸ்லிம்)

وَفِيْ رِوَايَةٍ { أنَّ النّبِيَّ  خَرَجَ فِيْ غَزْوَةِ تَبُوْكٍ يَوْمَ الْخَمِيْسِ , وَكَانَ يُحِبُّ أنْ يَخْرُجَ يَوْمَ الْخَمِيْسِ }
وَفِيْ رِوَايَةٍ { وَ كَانَ لاَ يَقْدُمُ مِنْ سَفَرٍ اِلاَّ نَهَارًا فِيْ الضُّحَي , فَاِذَا قَدِمَ بَدَأَ بِالْمَسْجِدِ فصّلَّي فِيْهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ فِيْهِ }

மற்றோர் அறிவிப்பில் உள்ளது:'நபி(ஸல்)அவர்கள் தபூக் போருக்குக் கிளம்பியது வியாழக்கிழமையில்! மேலும் வியாழக்கிழமையிலேயே பயணம் புறப்பட விரும்பக்கூடியவர்களாய் இருந்தார்கள்,,

இன்னோர் அறிவிப்பில்;: 'பயணத்திலிருந்து திரும்பிவந்தால் முற்பகல் பகல் - வேளையில்தான் வருவார்கள். (ஊரை) வந்தடைந்தால் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத் தொழுவார்கள். பிறகு அங்கு அமர்ந்திருப்பார்கள்,.

முதல் கோணல் முற்றும் கோணல்

தபூக் யுத்தம் ஹிஜ்ரி 9 ம் ஆண்டு நடைபெற்றது. முஸ்லிம்கள் மீது போர் தொடுக்கும் நோக்கத்துடன் ரோம் நாட்டுக் கிறிஸ்தவர்கள் பெரும் படைதிரட்டிக்கொண்டிருப்பதாகநபி(ஸல்)அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்களை எதிர்த்துப் போர் புரிவதற்காக முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு நபியவர்கள் தபூக் நோக்கிப் புறப்பட்டார்கள்.

தபூக்கை அடைந்தபொழுது அங்கு எதிரிகள் யாரையும் காணோம். அவர்களின் போர் நடவடிக்கையோ நடமாட்டமோ எதுவும் இல்லை. முஸ்லிம்களை எதிர்த்து வெற்றிகொள்ள முடியாது எனக்கருதி, கிறிஸ்த வர்கள் பின்வாங்கி விட்டிருந்தார்கள். ஆகையால் நபியவர்கள் தபூக்கில் இருபதுநாட்கள் தங்கியிருந்துவிட்டுப் போர் எதுவுமின்றி மதீனா திரும்பினார்கள்.

மதீனாவில் இருந்து முஸ்லிம்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டபொழுது கடுமையான கோடைகாலம்! பழங்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு நெருங்கிய பருவம்!

நயவஞ்சகர்களோ மறுமைபற்றிக் கவலைப்படாமல் உலக வாழ்க்கைக்கே முன்னுரிமை கொடுத்தார்கள்., அவர்களில் யாரும் போருக்குப் புறப்பட வில்லை. கழனிகளிலும் கனிகளிலும் கவனம் செலுத்தினார்கள். நிழலில் தஞ்சம் புகுந்தார்கள். தபூக் நோக்கிப் பயணமாவது அவர்களுக்கு மிகவும் பாரதூரமாகப்பட்டது! வாய்மையான இறைவிசுவாசிகளோ, நபியவர்களிடம் இருந்து கட்டளை பிறந்ததும் உடனே போருக்குப் புறப்பட்டுவிட்டார்கள்! பயணத்தின் தொலை தூரமோ கனிந்துவந்த கனிகளின் இனிமையோ அவர்களின் ஊக்கத்தைக் குலைத்திடவில்லை!

ஆனால் கஅப் பின் மாலிக்(ரலி)அவர்கள் தக்க காரணம் எதுவுமின் றியே தபூக் நோக்கிப் புறப்படாமல் பின்தங்கிவிட்டார்கள். அவர்கள் வாய்மை யான இறைநம்பிக்கையாளரே தவிர வஞ்சகர் அல்லர்! அவர்கள் சொன்னார்கள்:

'நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட எந்த யுத்தத்தைவிட்டும் நான் எப்பொழுதும் பின் தங்கியதில்லை'

- ஆம்! கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஓர் இறைவழிப்போராளியாகவே திகழ்ந்தார்கள்.

பத்று போரின் பின்னணி! 'ஆனால் பத்றுப் போரைத் தவிர'

- பத்றுப் போரில் கஅப் (ரலி) அவர்கள் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் அன்று நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்து வெளிக்கிளம்பியது யுத்தத்தை நாடியல்ல. குறைஷிகளின் வாணிபக்குழு ஒன்றைத் தாக்கிப் பொருட்களைப் பறிக்க வேண்டும்என்றுதான் புறப்பட்டிருந்தார்கள். அதனால் நபியவர்களுடன் வந்தது குறைந்த அளவிலான தோழர்களே!

இங்கு ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். மக்காவாசிகளின் வாணிபக் குழுமீது தாக்குதல் தொடுத்து அவர்களின் வியாபாரச் சரக்கு களைப் பறிப்பதற்காக நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் புறப்பட்டது வரம்பு மீறிய செயலோ அநீதியோஅல்ல. மக்கத்து குறைஷிகள்தாம் நபியவர் களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடும் தொல்லை கொடுத்து மக்காவில் வாழும் உரிமையை அவர்களிடம் இருந்து பறித்து விட்டிருந்தாகள்! வீடு, வாசல்கள், சொத்து-சுகங்கள் அனைத்தைவிட்டும் அவர்களை வெளியேற்றி யிருந்தார்கள்! ஆகையால் குறைஷிகளின் வாணிபக்குழு மீது தாக்குதல் தொடுத்துஅவர்களுடைய வியாபாரச்சரக்குகளைப் பறிப்பதற்காக முஸ்லிம்கள் மேற்கொண்ட நடவடிக்கை- தங்களுடைய உரிமைகளில் சிலவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்ளும் முயற்சியாகவே அமைகிறது!

ஆக! நபியவர்கள், வாணிபக்குழவை எதிர்கொள்வதற்காகப் புறப்பட்டதால் தான் அதிகப் படையையும் திரட்டவில்லை., போதிய ஆயுதங்களையும் குவித்துக்கொள்ளவில்லை! நபியவர்களோடு புறப்பட்டிருந்த முஸ்லிம்கள் வெறும் 313 பேர்தான்! உடன்சென்ற வாகனங்களும் குறைவுதான். எழுபது ஒட்டகங்களும் இரண்டு குதிரைகளும்தான் இருந்தன!

முஸ்லிம்கள் புறப்பட்டு வருவதை அறிந்த வாணிபக்குழுவின் தலைவர் அபூஸுப்யான், வியாபாரக் கூட்டத்தைக் காப்பாற்ற வருமாறு குறைஷி களுக்குத் தூதுஅனுப்பிவிட்டுப் பாதையைக்கடலோரமாகமாற்றிக் கொண்டுத் தப்பிவிட்டார்.

அபூ ஸுப்யான் அனுப்பிவைத்த ஆள் மக்கா நகர் வந்து அபாய அறிவிப்புச் செய்து உதவி கேட்டதும் குறைஷிகள் - தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் உட்பட அனைவரும் போருக்கான ஏற்பாட்டுடன் புறப் பட்டுவிட்டார்கள். பெரிய அளவில் ஆயுதங்ளைச் சேகரிகரித்துக் கொண்டு ஏறக்குறைய ஆயிரம் பேர் திரண்டு வந்தார்கள்!

அபூ ஸுப்யான் - நாங்கள் தப்பித்து வந்துவிட்டோம்., நீங்கள் மக்கா திரும்புங்கள். இப்போதைக்குப் போர் வேண்டாம் என்று மீண்டும் தூது அனுப்பிக் கேட்டுக்கொண்டபிறகும் குறைஷித் தலைவர்கள் மக்கா திரும்ப வில்லை. சண்டைக்கு வலியவந்தார்கள். ஆம்! குறைஷித் தலைவர்கள் ஆணவத்துடன் போர் முறசு கொட்டிக் கொண்டுவந்து பத்று மைதானம் வந்து முகாமிட்டார்கள். இறுதியில் அவர்களுடைய ஆணவத்திற்குக் கிடைத்த பரிசு வரலாறு காணாத தோல்விதான்!

- இவ்வாறு முஸ்லிம்கள் பத்றுப் போரைச் சந்தித்தது எதிர்பாராத ஒன்றாகும். அதனால்தான் அதில் கஅப் பின் மாலிக்(ரலி) அவர்கள் கலந்து கொள்ளாமலானது!

ஆனால் தொடக்க காலத்தில் நபியவர்களிடம் - இஸ்லாத்தின் பேரில் பைஅத் எனும் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்த நிகழ்ச்சியில் தாமும் கலந்துகொண்டதைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள் கஅப் (ரலி) அவர்கள். அந்த நிகழ்ச்சி ஹிஜ்ரத்திற்கு முன்பு மினாவில் ஒரு கணவாயில் வைத்து நடைபெற்றது. பத்று யுத்தத்தைவிட அதுதான் தமக்குப் பரியமானது என்றும் சொல்கிறார்கள். ஏனெனில் ஐயமின்றி அது ஒரு மகத்தான உடன்படிக்கை., மாபெரும் விசுவாசப் பிரமாணம்! ஆனாலும் பத்று யுத்தம்தான் காலமெல்லாம் மக்களிடையே பேசப்படும் வகையில் பிரபலம் அடைந்தது! ஏனெனில் அது முக்கியமானதொரு யுத்தம்., பிரபலம் அடைந்துவிட்டது. என்னஇருந்தாலும் உறுதிமொழி எடுக்கும் ஒருநிகழ்ச்சி போரைப் போல் பிரபலமாக முடியாது!

ஆக! கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தமக்குத்தாமே ஆருதல் சொல்லிக் கொள்கிறார்கள். பத்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புத் தப்பினாலும் அந்தக் கணவாய் உடன்படிக்ககையின் பாக்கியம் கிடைத்ததே என்று!

'நபி(ஸல்) அவர்கள் ஏதேனும் போருக்குப் புறப்பட நாடினால் அதனை மறைத்தே பேசுவார்கள்'

- அதாவது தங்களது நாட்டத்தை வெளிப்படுத்தமாட்டார்கள். எடுத்துக்காட்டாக, தெற்கு நோக்கிப் புறப்பட நாடியிருந்தால் - வடக்கு நோக்கிப் புறப்பட வேண்டும் என்பதுபோல் பேசுவார்கள். கிழக்கு நோக்கிப் புறப்பட நாடியிருந்தால் மேற்கு நோக்கிப் பயணமாக வேண்டும் என்பதுபோல் பேசுவார்கள். - இது நபியவர்கள் மேற்கொண்ட விவேகமிக்க நடவடிக்கை., போர்த் தந்திரம்!

ஏனெனில், எங்குச் செல்லப்போகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் அது பற்றிய செய்தி எதிரிகளுக்குக் கிடைத்துவிடலாம். அதற்கேற்ப அவர்கள் தங்களது திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்., போருக்குப்பொருத்தமான இடமெனஎந்தஇடத்தை நபியவர்கள் தேர்வு செய்துள்ளார்களோ அந்த இடத்தை விட்டும் எதிரிகள் விலகிச் சென்றிடவும் செய்யலாம்!

ஆனாலும் தபூக் போர்ச்சூழ்நிலையில் பொதுவான இந்த வழக்கத்திற்கு ஏற்ப நபியவர்கள் மறைத்துப் பேசவில்லை. தபூக் நோக்கிப் புறப்படப் போகிறோம் என்பதைத் தெளிவுபடவே கூறினார்கள். அப்படிச் செய்ததற்குப் பலகாரணங்கள் இருந்தன:

1) முன்பு நாம் குறிப்பிட்டதுபோன்று -அது கடுமையான கோடை காலம்., கனிகள் அறுவடைக்குத் தயாராகி வந்த நேரம்! மனித மனம் சுக வாழ்வை நாடும் இயல்புடையதாகவும் சோம்பலின் பக்கம் சாயக்கூடியதாகவும்தானே உள்ளது. எனவே மனத்தைக் கட்டுப்படுத்திப் பயனுள்ள பணிகளில் நாட்டம் செலுத்த வேண்டுமெனில் இலட்சியம் தெளிவாக இருப்பது அவசியம்!

2) மதீனாவில் இருந்து தபூக் வெகுதொலைவில் இருந்தது. எங்கும் ஒரேபாலைவெளி., மணற்பரப்பு!அத்துடன் கோடை வெயிலும் சுட்டெரித்துக் கொண்டிருந்தது! ஆகையால் இந்தப் பயணத்தில் முஸ்லிம்கள் கடுமையான தாகத்தையும் களைப்பையும் சகித்துக்கொள்ள வேண்டும்! இத்தகைய ச10ழ்நிலையில் எங்குச்செல்கிறோம் என்பதைவெளிப்படையாகச் சொன்னால்தான் அதற்கேற்ப அவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள முடியும்!

3) எதிரிகளோ அதிக வலிமையுடன் இருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை திகைப்பூட்டும் அளவு இருந்தது. அதனை எதிர்கொள்ளும் வகையில் முஸ்லிம்கள் ஊக்கத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் நபி (ஸல்) அவர்கள் எங்கு நோக்கிப் புறப்படுகிறோம்., யாரை எதிர்த்துப் போர் புரியப் போகிறோம் என்பதைத் தெளிவாகக் கூறினார்கள்!

'நபி(ஸல்)அவர்களும் முஸ்லிம்களும் போருக்கான தயாரிப்பைச் செய்து முடித்திருந்தார்கள் . . .'

ஆனால் கஅப்(ரலி)அவர்கள் அதைப் பிற்படுத்திக் கொண்டே இருந்தார் கள். தினமும் காலையில் வாகனத்தில் ஏறி, இதோ! இப்பொழுதே நான் புறப்பட்டுச் சென்று நபியவர்களை அடைந்துவிடுவேன்., முஸ்லிம்களோடு இணைந்துவிடுவேன் என்று கூறுவார்கள்தான். ஆனால் அவர்களால் அப்படிச் செயல்பட முடிவதில்லை. நிலைமை அவர்களை மேலும் மேலும் தாமிதப்படுத்திக்கொண்டே சென்றது!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Powered by Blogger